வன்முறையை நம்பி படம் இயக்குவதா?: எஸ்.ஏ.சந்திரசேகரன் ஆதங்கம்..

வன்முறை முக்கியமல்ல, கதைதான் முக்கியம் என கூறியுள்ளார் எஸ்ஏசி. இது பற்றிய விவரம் காண்போம்..

பள்ளிப் பருவ மாணவர்களை மையமாகக் கொண்டு உரு​வாகி​யுள்ள படம், ‘ராம் அப்​துல்லா ஆண்டனி’. ‘சூப்​பர் சிங்​கர்’ மூலம் பிரபல​மான பூவை​யார், ஆண்​டனி கதா​பாத்​திரத்​தி​லும் அப்​துல்லா கதா​பாத்திரத்​தில் அர்​ஜுன், ராம் கதா​பாத்​திரத்​தில் அஜய் அர்​னால்டு ஆகியோ​ரும் நடித்துள்ளனர். த.ஜெயவேல் இயக்கியுள்​ளார்.

இப்படத்திற்கு எல்​.கே.​விஜய் ஒளிப்​ப​திவு செய்​துள்​ளார். டி.ஆர். கிருஷ்ண சேத்​தன் இசையமைத்துள்​ளார். இப்படத்​தின் இசை மற்றும் ட்ரெய்​லர் வெளி​யீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இசைத்தட்டை வெளியிட்டு எஸ்.ஏ சந்திரசேகரன் பேசும்போது,

‘இப்போதைய ட்ரென்ட் சூப்பர் ஸ்டாரை வைத்து படம் எடுத்தால் போட்ட பணத்தை எடுத்து விடலாம். தயாரிப்பாளர் தப்பித்து விடுவார். இல்லையென்​றால்​ புதியவர்​களை வைத்​து படம்​ பண்​ண வேண்டும்​.

இதற்​கு நடு​வில்​ உள்ளவர்​களை வைத்து படம்​ பண்ணினால்​ தயாரிப்பாளர்​கள்​ காணா​மல்​ போய்​விடுவார்​கள்​. சூப்​பர்​ ஸ்டார்​களை வைத்​து படம்​ எடுத்​தால்​ அதற்​கு பைனான்​ஸ்​ கொடுப்​பதற்​கு ஆட்​கள்​ இருக்கிறார்​கள்​. நல்​ல கதையை வைத்​து படம்​ எடுப்​ப​தற்​கு பைனான்ஸ்​ பண்​ண ஆட்​கள்​ தயாராக இல்லை.

ஒரு காரியத்தை ஆரம்பிக்கும்போது நாம் ஜெயிப்போம் என நினைத்து ஆரம்பித்தால், கண்டிப்பாக ஜெயிப்போம். இப்போது வரை, நான் ஜெயிப்பேன் என்று தான் படம் எடுத்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் படம் வெற்றி அடையும் என்கிற நம்பிக்கை இருக்கிறது.

இன்றைய தலைமுறை, வன்முறையை தான் ரசிக்கிறார்கள் என்று சொல்லும் இயக்குநர்கள், கத்தி, ரத்தம், சத்தம் என இந்த மூன்றையும் நம்பித்தான் படம் எடுக்க வருகிறார்களே தவிர, கதை எதுவும் கிடையாது’ என்றார்.

sa chandrasekhar speaks film ram abdullah antony
ram abdullah antony movieSA Chandrasekharstoryஎஸ்.ஏ.சந்திரசேகரன்கதை