நடிகர் ஆர்.கே.சுரேஷ் இயக்கும் ‘பிளைண்ட்’ திரைப்படம்

தெலுங்கில் வேணு எல்டண்டி இயக்கத்தில் உருவாகவுள்ள படம் ‘எல்லம்மா’. இப்படத்தில் இசையமைப்பாளரானதேவி ஸ்ரீபிரசாத் நாயகனாக நடிக்கவிருப்பதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இதற்காக முழுமையாக தனது உடலமைப்பை மாற்றி வருவதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார்கள்.

தெலுங்கில் ‘பாலகம்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் வேணு எல்டண்டி. அப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து தில் ராஜு தயாரிக்கும் படத்தினை இயக்க ஒப்பந்தமானார். இந்த படத்தில் தேவி ஸ்ரீபிரசாத் இணையவுள்ளார்.

இந்நிலையில், தமிழ் சினிமாவில் பாலா இயக்கிய ‘தாரை தப்பட்டை’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் ஆர்.கே.சுரேஷ். இதில் அவர் கொடூர வில்லனாக நடித்திருந்தார். அடுத்து விஷாலின் ‘மருது’, ‘பில்லா பாண்டி’, ‘நம்ம வீட்டுப் பிள்ளை’, ‘தலைவன் தலைவி’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். திரைப்படங்களையும் தயாரித்து வரும் அவர், இப்போது இயக்குநராக அறிமுகமாகிறார்.

அவர் இயக்கும் படத்துக்கு ‘பிளைண்ட்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் உருவாகும் இந்தப் படத்தை ஸ்டுடியோ 9 புரொடக்சன்ஸ் மூலம் மாதவி சுரேஷ் தயாரிக்கிறார். விஜய் கிரண் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு வில்லியம் பிரான்சிஸ் இசை அமைக்கிறார். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கிறது. அடுத்த வருடம் படம் வெளியாக இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.

actor rk. sureshblind moviedirector balaதேவி ஸ்ரீபிரசாத்பிளைண்ட்