டி.ராஜேந்தர் பாட அனிருத் இசைக்க, ரஜினியின் ஸ்டைல் டான்ஸ்: புரமோ ஸாங் அப்டேட்ஸ்

‘கூலி’ படத்தின் முதல் சிங்கிள் ஸாங் புரமோ பற்றிப் பார்ப்போம்..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் 171-வது படமான ‘கூலி’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ளார். இப்படத்தில் சத்யராஜ், ஸ்ருதிஹாசன், அமீர்கான், உபேந்திரா உள்பட பலர் நடித்துள்ளனர். ஆகஸ்ட் 14-ந்தேதி ரிலீஸாகிறது.

இந்நிலையில் ‘கூலி’ படத்தின் முதல் சிங்கிள் பாடல் டி.ராஜேந்தர் குரலில் வெளியாக உள்ளது. இதன் மூலம், முதல் முறையாக ரஜினியின் படத்தில் டி.ராஜேந்தர் பாடியிருக்கிறார். ஏற்கனவே, இப்படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோவில் இடம்பெற்ற சீட்டுக்கு என்ற பாடல் செம வைரலானது. டி.ராஜேந்தர் பாட, அனிருத் இசையமைக்க, ரஜினி அப்பாடலுக்கு நடனமாட ஒரே வைப் தான்.

ஆதலால், கண்டிப்பாக இப்பாடல் திரையில் வரும்போது செம மாஸாகவும் கொண்டாட்டமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ரசிகர்களும் தற்போதே இப்பாடலில், தலைவர் எப்படியெல்லாம் ஆடுவார்.. ஸ்டைல் பண்ணுவார்.. என ஆவலுடன் யோசிக்க துவங்கிவிட்டனர்.

முன்னதாக, இப்படத்தின் முதல் சிங்கிள் அறிவிப்பிற்காக புரமோ ஷூட் வீடியோ படமாக்கப்பட்டது. அந்த புரமோ ஷூட்டில் டி.ராஜேந்தரும் கலந்துகொண்டார். தற்போது இப்படத்தின் சிங்கிள் பாடல் வெளியீட்டிற்கு புரமோ ரிலீஸாகவுள்ளது. இதில் அனிருத்-டி.ராஜேந்தர் இடம்பெறுவார்கள் என தெரிகின்றது. முதல் சிங்கிள் பாடல், இந்த மாதம் இறுதியில் ரிலீஸாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

coolie moviedirector lokesh kanagarajsuper star rajinikanthஅனிருத்டி.ராஜேந்தர்