சூப்பர் ஸ்டார் ரஜினி, ஜெயிலர் படத்திற்கு பிறகு வேட்டையன் படத்தில் நடித்தார். இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் கருத்துகள் அனைவருக்கும் பிடித்திருந்தன. அவ்வகையில், வெற்றிகரமாக ஓடி வருகிறது. லைகா நிறுவனத்திற்கு லாபத்தையும் அள்ளிக் கொடுத்திருக்கிறது.
தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி செம எனர்ஜியோடு ‘கூலி’ திரைப்படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தை சன் பிக்சர்ஸ் மிகப்பிரம்மாண்டமான முறையில் தயாரித்து வருகின்றது.
இப்படத்தின் படப்பிடிப்பு ஒருபக்கம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அடுத்ததாக ரஜினி நெல்சனின் இயக்கத்தில் ஜெயிலர் 2 படத்தில் நடிப்பது உறுதியாகியிருக்கின்றது. இதற்கிடையில், கடந்த சில தினங்களாக ஒரு தகவல் தீயாய் பரவி வருகின்றது. அதாவது, ரஜினி வெங்கட் பிரபுவின் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வருகின்றன.
விஜய்யை வைத்து GOAT படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அடுத்ததாக சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக இருந்தார். ஆனால், அப்படம் தாமதமாகும் என்ற காரணத்தால், அடுத்ததாக ரஜினியை வைத்து வெங்கட் பிரபு ஒரு படத்தை இயக்க இருப்பதாக தகவல் வந்தன.
வெங்கட் பிரபு சொன்ன கதை ரஜினிக்கு பிடித்திருப்பதால், அவரின் இயக்கத்தில் நடிக்க ரஜினி ஒப்புக்கொண்டதாக தெரிகின்றது. மேலும், லைக்கா இப்படத்தை தாயரிப்பதாகவும் பேசப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், இந்த தகவலை தொடர்ந்து இவர்கள் இணையும் படம் எப்படி இருக்கும் என்ற கணிப்பில் ரசிகர்கள் ஆழ்ந்துள்ளனர்.
ரஜினி மற்றும் வெங்கட் பிரபு இணைந்தால் அப்படம் கண்டிப்பாக ரசிகர்கள் கொண்டாடக்கூடிய ஒரு படமாகவே இருக்கும் என தெரிகின்றது. மேலும், அது ரஜினியின் படமாக இல்லாமல் வெங்கட் பிரபுவின் ஸ்டைலில் உருவாகும் படமாக இருந்தால் சற்று வித்யாசமாக இருக்கும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
சமீபத்தில் விஜய்யை வைத்து வெங்கட் பிரபு இயக்கிய GOAT படத்தில் கூட வித்யாசமான ஒரு விஜய்யை நம்மால் பார்க்கமுடிந்தது. நெகட்டிவ் கதாபாத்திரத்தில் விஜய் GOAT படத்தில் மிரட்டியிருந்தார். அதுபோல ரஜினியை வெங்கட் பிரபு இயக்கும் கதையும் வித்தியாசமாகவே இருக்கும் என கோலிவுட் வட்டார நம்பிக்கையான தகவல்கள், ரசிகர்களால் வைரலாகி வருகிறது.
பிரியாணி ருசிபோல, மங்காத்தா ஆட்டமாய் கலக்குனா சரி..