மாஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க, ரஜினிகாந்த் நடிப்பில் ஆக்ஷன் அவதாரமாய் உருவாகும் ‘கூலி’ படத்தின் ஷூட்டிங் அப்டேட்ஸ் பற்றிப் பார்ப்போம்..
ஜெய்ப்பூரில் நடந்து வந்த ‘கூலி’ பட ஷூட்டிங் நிறைவடைந்துள்ளது. முன்னதாக, ரஜினி பிறந்த நாளையொட்டி, அனிருத் இசையில் பாடல் கிளிம்ப்ஸ் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
இதனிடையே, அடுத்தகட்ட ஷூட்டிங் பொள்ளாச்சி, கோவை மற்றும் கேரளாவில் துவங்கப்பட உள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி மற்றும் கோவையில் சூர்யா-45′ பட ஷூட்டிங் சமீபத்தில் நடத்தப்பட்டது.
இந்நிலையில் கூலி படத்தின் ஷூட்டிங் விறுவிறுப்பாக நடத்தப்பட்டு, வரும் பிப்ரவரிக்குள் மொத்த ஷூட்டிங்கையும் நிறைவு செய்ய லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரஜினியை இதுவரை இல்லாத வகையில் அதிரடி ஆக்சன் களத்தில் காட்ட உள்ளதாக லோகேஷ் தெரிவித்திருந்த நிலையில், அதற்கேற்ப விசாகப்பட்டினத்தில் மிகப்பெரிய செட் போடப்பட்டு ஷூட்டிங் நடத்தப்பட்டது.
இந்நிலையில், தங்கக்கடத்தலை மையமாக கொண்டு உருவாகும் இப்படத்தில் சத்யராஜ், உபேந்திரா, அமீர்கான் மற்றும் ஸ்ருதி ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் இணைந்துள்ளதால் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. ஆம், கோடையிலே வெளிவரும் தலைவர் படத்தை கொண்டாட காத்திருக்கின்றனர்.