ரஜினியின் ‘தலைவர்-173’ பட இயக்குநர்? ராம்குமாரின் வைரல் பேச்சு..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் படத்தை இயக்கும் மாபெரும் வாய்ப்பை இளம் இயக்குநர் ராம்குமார் பாலகிருஷ்ணன் பெற்றிருப்பதாக தெரிகிறது. இவர்தான் ‘தலைவர்-173’ திரைப்படத்தின் இயக்குநர் என கூறப்படுகிறது.

‘பார்க்கிங்’ திரைப்படத்தை இயக்கி, வெற்றிப்படமாக கொடுத்து, தேசிய விருதையும் வென்றுள்ளார் ராம்குமார் பாலகிருஷ்ணன். அதனைத்தொடர்ந்து சிம்பு நடிப்பில் STR-49 திரைப்படத்திற்கு பூஜை நடைபெற்று, இயக்குவதற்கான பணிகளில் இருந்த ராம்குமாருக்கு ரஜினியிடம் கதை சொல்லும் வாய்ப்பு கிடைத்தது. ரஜினிக்கு ராம்குமார் பாலகிருஷ்ணன் சொன்ன கதை பிடித்துப்போகவே ‘தலைவர்-173’ பட இயக்குநர் ராம்குமார் தான் என தகவல்கள் வருகின்றன.

இதற்கிடையில் ராம்குமார் பாலகிருஷ்ணன் தெரிவிக்கையில், ‘ரஜினி சார் படங்களை பார்த்து தான் வளர்ந்தேன். சினிமாவிற்கு வரும் ஆசை, அவர் படங்களைப் பார்த்து தான் வந்தது. ‘பாட்ஷா’ படத்தை நான் எத்தனை முறை பார்த்தேன் என்பதே எனக்குத் தெரியாது. என் வாழ்க்கையில் நான் பலமுறை பார்த்த திரைப்படம் என்றால் அது பாட்ஷா தான்.

அப்படி இருக்கையில், ரஜினி சாரை வைத்து ஒரு படத்தை இயக்குவது தான் என்னுடைய மிகப்பெரிய கனவு’ என கூறியுள்ளார் ராம்குமார் பாலகிருஷ்ணன். ‘தற்போது கனவு பலித்தது போல’ ராம்குமாரின் இந்த பேச்சு தற்போது வைரலாகி தெறிக்கிறது.

rajini in thalaivar 173 movie and ramkumar balakrishnan speech
KamalHaasanRajinikanthstoryதலைவர் 173ரஜினி