‘டிராகன்’ படத்தின் பட்ஜெட்டை விட, இப்பவே விற்பனை ‘செம’: படக்குழு உற்சாகம்

தனுஷ் இயக்கிய படமும், அஸ்வத் இயக்கிய படமும் வரும் 21-ந்தேதி வெளியாகிறது. இதில், ‘டிராகன்’ பட விற்பனை பற்றிப் பார்ப்போம்..

‘கோமாளி’ படம் மூலம் இயக்குனராக அறிமுகமான பிரதீப் ரங்கநாதன், தனது 2-வது படமான ‘லவ் டுடே’ மூலம் ஹீரோவாக அவதாரம் எடுத்தார்.

வெறும் 15 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட ‘லவ் டுடே’ படம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது.

இப்படத்தின் வெற்றிக்கு பின்னர் பிரதீப் ரங்கநாதனுக்கு ஹீரோவாக நடிக்க பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தற்போது அவர் கைவசம் இரண்டு படங்கள் உள்ளன. அதில் ஒன்று ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ மற்றொன்று டிராகன்.

இதில் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ திரைப்படத்தை விக்னேஷ் சிவன் இயக்கி வருகிறார் கோடை விடுமுறைக்கு ரிலீஸாக உள்ளது. ‘டிராகன்’ திரைப்படத்தை அஸ்வத் மாரிமுத்து இயக்கியுள்ளார்.

இப்படத்தில் பிரதீப்புக்கு ஜோடியாக அனுபமா பரமேஸ்வரன் நடித்துள்ளார். இப்படம் வருகிற 21-ந் தேதி ரிலீஸாக உள்ளது.

டிராகன் திரைப்படத்தின் ரிலீசுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் உள்ள நிலையில், தற்போதே ப்ரீ ரிலீஸ் பிசினஸ் எகிறியுள்ளது. அதாவது, இப்படத்தின் ஓடிடி உரிமை மட்டும் ரூ.14 கோடிக்கு விற்பனை ஆகியுள்ளது. இதுதவிர, சாட்டிலைட் உரிமை ரூ.6 கோடிக்கும், ஆடியோ உரிமை ரூ.6 கோடிக்கும் விற்கப்பட்டிருக்கிறது.

ஆக, இப்படம் ரிலீசுக்கு முன்பே ரூ.26 கோடி வசூலித்து விட்டது. படத்தின் பட்ஜெட்டைவிட இது அதிகம் என கூறப்படுகிறது. இதனால், படக்குழுவினர் செம குஷியில் உள்ளனர். 21-ந் தேதி தனுஷ் இயக்கிய ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ படமும் ரிலீஸாகிறது.

‘டிராகன்’ படத்தில் பிரதீப் ரங்கநாதன் உடன் கெளதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின், விஜே சித்து, ஹர்ஷத் கான் உள்பட பலர் நடித்துள்ளனர்.

லியோன் ஜேம்ஸ் இசையமைத்துள்ளார். இப்படத்தில், அனிருத் மற்றும் சிம்பு பாடிய பாடல்கள் வெளியாகி செம ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

actor dhanushdragon moviePradeep Ranganathanலவ் இன்சூரன்ஸ் கம்பெனிலவ் டுடே