இடுப்பு எலும்பு உடைந்து விட்டது.. செஃப் தாமு சொன்ன ஷாக் தகவல்..!

இடுப்பு எலும்பு உடைந்து விட்டதாக செஃப் தாமு வருத்தத்துடன் சொல்லியுள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.இதில் செஃப் தாமு நடுவராக பங்கேற்று வருகிறார். சமீபத்தில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் […]

தேர்தல் நேரத்தில் ‘ஜனநாயகன்’ படத்திற்கு பாதிப்பு நேருமோ?: விஜய் எடுத்த அதிரடி முடிவு

‘ஜனநாயகன்’ படத்தின் விநியோக உரிமை பற்றிப் பார்ப்போம்.. ஹெச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் கடைசிப் படமான ‘ஜனநாயகன்’ ஷுட் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. குறிப்பாக, விஜய் சம்பந்தப்பட்ட காட்சிகள் அனைத்தும் எடுத்து முடிக்கப்பட்டு விட்டது. மற்ற நடிகர்களை வைத்து சில காட்சிகள் மட்டுமே படமாக்கப்பட உள்ளது. அடுத்த ஆண்டு ஜனவரி 8-ந்தேதி வெளியாகவுள்ள இப்படத்தினை கே.வி.என் நிறுவனம் தயாரித்திருக்கிறது. இதன் ஓடிடி உரிமையினை அமேசான் ப்ரைம், தொலைக்காட்சி உரிமையினை சன் டிவியும் பெற்றுள்ளது. தற்போது இதர விநியோக […]

விக்ரம் பிரபு, சண்முகப் பாண்டியன் நடித்துள்ள படங்கள் ரிலீஸ்

* லவ் மேரேஜ், படை தலைவன் ஆகிய படங்களின் வெளியீடு பற்றிப் பார்ப்போம்.. அறிமுக இயக்குநர் சண்முகப் பிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடித்துள்ள ‘லவ் மேரேஜ்’ படம் ஜூன் 27-ந்தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜராஜ் உள்பட பலர் நடித்துள்ளனர். சத்யராஜ் கவுரவ வேடத்தில் நடித்திருக்கிறார். ஒளிப்பதிவாளராக மதன் கிறிஸ்டோபர், இசையமைப்பாளராக ஷான் ரோல்டன் பணிபுரிந்துள்ளனர். இப்பட பாடல்கள் வரவேற்பைப் பெற்றுள்ளன. கதை என்னவென்றால், […]

நாகரிகமாக நடந்து கொள்ளுங்கள்: வைரமுத்து ஆதங்கம்

‘செல்வம் பொதுவுடைமை ஆகவில்லை; அறிவாவது பொதுவுடைமை ஆகிறதே’ என அகமகிழ்ந்துள்ளார் வைரமுத்து. இது பற்றிய தகவல்கள் காண்போம்.. தமிழ் சினிமாவில், கடந்த சில ஆண்டுகளாக பழைய பாடல்களை பயன்படுத்தும் வழக்கம் அதிகரித்துள்ளது. அந்த பாடல்களை ரீமிக்ஸ் செய்து அல்லது அப்படியே பயன்படுத்தி வருகின்றனர். அந்தந்த பாடல்களின் இசையமைப்பாளர்கள் அல்லது பாடல் உரிமையாளர்களிடம் முறையாக அனுமதி பெற்று, பயன்படுத்தும் பொழுது பிரச்சினை எழுவதில்லை. ஆனால், எந்த அனுமதியும் பெறாமல் பயன்படுத்தும் பொழுது அது காப்பிரைட்ஸ் பிரச்சினையாக எழுகிறது. சில […]

கர்மா சும்மா விடாது, பிரியாணி சாப்பிட்டு ரெஸ்ட் எடுங்கள்: பாடகி கெனிஷா விளக்கம்

ரவிமோகனுடன் இணைந்துள்ள கெனிஷா கர்ப்பம் என்று பரவிய தகவலுக்கு, கெனிஷா விளக்கம் அளித்துள்ளார். ரவிமோகன்-ஆர்த்தி விவாகரத்து வழக்கு தெரிந்ததே. இதனைத் தொடர்ந்து ரவி-பாடகி கெனிஷா இருவரும் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகவும் கூறப்பட்டது. இருவரும் லிவின் உறவில் இருப்பதாகவும், கெனிஷா கர்ப்பமாகவிட்டார் எனவும் வலைதளங்களில் தகவல் வெளியாகி வருகிறது. இது குறித்து கெனிஷா விளக்கம் கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: ‘பெங்களூருவில் பிறந்து வளர்ந்த நான், அதன் பிறகு கனடா சென்றேன். அங்கு இசைக்கல்லூரியில் படித்து முடித்த பிறகு […]

கமல்ஹாசன் தயாரிப்பில் சூர்யா நடிக்கிறார்

‘வீர தீர சூரன்’ பட இயக்குனரின் அடுத்த படம் பற்றிய தகவல் காண்போம்.. கமல்ஹாசன் ராஜ் கமல் இன்டர்நேஷனல் பிலிம்ஸ் என்று தயாரிப்பு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் கடந்த ஆண்டு சிவகார்த்திகேயன் நடித்த ‘அமரன்’ படத்தை வெளியிட்டது. அதனை தொடர்ந்து தற்போது மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் ‘தக் லைப்’ படத்தையும் இணைந்து தயாரித்து வெளியிட்டுள்ளது. மேலும், படங்களை தயாரித்து வருகிறது. இந்நிலையில், கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம் ‘வீர தீர சூரன்’ பட இயக்குனர் […]

தனது பெற்றோர் கமல்-சரிகா விவாகரத்து பற்றி ஸ்ருதிஹாசன் வைரலாகும் பேச்சு

தனது முதிர்ந்த வாழ்வியல் அனுபவத்தை ஸருதிஹாசன் மனம் திறந்து பகிர்ந்துள்ளார். இது பற்றிப் பார்ப்போம்.. ஸ்ருதி ஹாசன், தனது பெற்றோரான கமல்ஹாசன்-சரிகா ஆகியோரின் விவாகரத்து குறித்து முன்பு தெரிவித்த தகவல்கள் தற்போது மீண்டும் வலைதளங்களில் விவாதத்திற்கு வந்துள்ளது. தந்தை-தாயின் பிரிவு தனக்கு வருத்தத்தை விட, வாழ்க்கையின் ஒரு மதிப்புமிக்க பாடத்தைக் கற்றுக் கொடுத்தது, குறிப்பாக ஒரு பெண் பொருளாதார ரீதியாகவும், உணர்ச்சி ரீதியாகவும் சுதந்திரமாக இருக்க வேண்டிய அவசியத்தை உணர்த்தியது என கூறியுள்ளார். ‘நான் சின்ன வயதில் […]