இடுப்பு எலும்பு உடைந்து விட்டது.. செஃப் தாமு சொன்ன ஷாக் தகவல்..!

இடுப்பு எலும்பு உடைந்து விட்டதாக செஃப் தாமு வருத்தத்துடன் சொல்லியுள்ளார்.


cook with comali chef damu latest speech update

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி இந்த நிகழ்ச்சி தொடங்கிய நாள் முதல் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வந்தது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது.இதில் செஃப் தாமு நடுவராக பங்கேற்று வருகிறார். சமீபத்தில் அவருக்கு பத்மபூஷன் விருது வழங்கப்பட்டது அனைவரும் அறிந்ததே.

இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் செஃப் தாமு பேசியுள்ளார் அதில் எனக்கு பத்மபூஷன் விருது சமீபத்தில் கிடைத்தது 40 வருட கனவாக அந்த விருது இருந்தது அதுவும் சமையல் துறையில் எனக்கு இந்த விருது கிடைத்தது மகிழ்ச்சி ஆனால் நான் விருது வாங்கிவிட்டு இறங்கும்போது கால் பிரண்டு கீழே விழுந்து விட்டேன் அப்போது இடுப்பு எலும்பு உடைந்து விட்டது என்று கூறியுள்ளார்.

இப்போது சூட்டிங் இருக்கு வீல் சேரில் வருவதாகவும் விரைவில் குணமடைந்து விடுவேன் என்றும் தெரிவித்துள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.


cook with comali chef damu latest speech update
chefcook with comalicook with comali chef damu latest speech updatedamulatest speechupdateசெஃப் தாமுபத்மபூஷன் விருதுவிஜய் டிவி