ஐஸ்வர்யா ராஜேஷ் – விக்ராந்த் நடிக்கும் அண்டர் 18!

SR PRODUCTIONS தயாரிப்பில் கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் நடிக்கும் “அண்டர் – 18” படத்தின் பூஜை விழா கோலாகலம்! ‘மெட்ராஸ்காரன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, SR PRODUCTIONS சார்பில் தயாரிப்பாளர் ஜெகதீஸ் தயாரிக்கும் புதிய திரைப்படம் “அண்டர் – 18” (Under – 18). இயக்குநர் வெற்றிமாறனின் நீண்டகால இணை இயக்குநராக பணியாற்றிய கார்த்திக் பெருமாள் சாமி இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். கிச்சா சுதீப், ஐஸ்வர்யா ராஜேஷ், விக்ராந்த் மற்றும் கிஷோர் […]

ஜூன் திரைக்கு வரும் ஹாரர் திரில்லர் ‘டார்க் ஜெயிண்ட்’!

உண்மை சம்பவங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ஹாரர் திரில்லர் திரைப்படமான ‘டார்க் ஜெயிண்ட்’ வரும் ஜூன் 11ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை ஹரி உத்ரா நிறுவனம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறது. இயக்குநர் கே.எஸ். கிஷன் இயக்கியுள்ள இந்த திரைப்படம், ஒரு கிராமத்தில் நடைபெற்ற சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, கற்பனை கலந்த திரைக்கதையுடன் உருவாக்கப்பட்டுள்ளது. முழுக்க முழுக்க ஹாரர் மற்றும் திரில்லர் அம்சங்களுடன் உருவான இந்த படம், ரசிகர்களுக்கு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. […]

ஜேசன் சஞ்சய் இயக்கியுள்ள சிக்மா படத்தின் வெளியீட்டுத் தேதி!

லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், தயாரிப்பாளர் சுபாஸ்கரன் வழங்கும், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் உலகம் முழுவதும் ஜூலை 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்துள்ள இந்தப் படம், அறிவிப்பு வெளியான தருணத்திலிருந்தே ரசிகர்கள் மற்றும் திரையுலக வட்டாரங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளைப் பெற்று சமூக வலைதளங்களில் கவனம் ஈர்த்துள்ளது. இதன் மூலம் படத்தின் […]

பிரபல கேமராமேன் ரவியாதவ் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய “ரஞ்சன்” படக்குழு!

இயக்குநர், தயாரிப்பாளர் மற்றும் நடிகரான தியாகராஜன் இயக்கத்தில், டாப் ஸ்டார் பிரஷாந்த் நடிக்கும் “ரஞ்சன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் படத்தில் சத்யராஜ், தேவயானி, ஆர்.கே. சுரேஷ், மோகன்ராம், ஆதிரா, மானஸ்வி, ஆதேஷ்பாலா, சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். மேலும், தயாரிப்பாளர் கதிரேசனின் மகன் ஹரியும், நடிகை தேவயானியின் மகள் பிரியங்காவும் இத்திரைப்படத்தின் மூலம் இளம் ஜோடியாக அறிமுகமாகிறார்கள். இளைஞர்களிடையே போக்சோ சட்டம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் உருவாகும் […]

பாலாஜி சக்திவேல் கதாநாயகனாக நடித்துள்ள பைலட் திரைப்படம் ‘ஆஃப் தி ரெக்கார்ட்’!

இயக்குநராக அறிமுகமாகி, பின்னர் நடிகராகவும் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ள பாலாஜி சக்திவேல், தற்போது ‘ஆஃப் தி ரெக்கார்ட்’ என்ற 12 நிமிட பைலட் திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இயக்குநராக மட்டுமல்லாமல், நடிகராகவும் தனது திறமையை தொடர்ந்து நிரூபித்து வரும் அவர், இந்தப் படத்தில் இரட்டை பரிமாணங்கள் கொண்ட வித்தியாசமான கதாபாத்திரத்தில் தோன்றியிருப்பது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘டிஎன்ஏ’, ‘காந்தி கண்ணாடி’ மற்றும் ‘வாரண்ட்’ இணையத் தொடர் போன்ற படைப்புகளில் தனது இயல்பான மற்றும் உணர்வுப்பூர்வமான நடிப்பால் கவனம் […]

இந்திய கிராமங்களின் ஆன்மாவை கொண்டாடும் படம் “பெத்தி” – ராம் சரண்!

“இந்திய கிராமங்களின் திறமைகளையும், உண்மையான இந்திய ஆன்மாவையும் பெரிய திரையில் கொண்டாடும் படம்தான் ‘பெத்தி’” என டெல்லி பத்திரிகையாளர் சந்திப்பில் ராம் சரண் உருக்கமாகப் பேசியுள்ளார். மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள கிராமத்து விளையாட்டு பின்னணியிலான பிரம்மாண்ட திரைப்படம் “பெத்தி”, நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், தயாரிப்பாளர் வெங்கட சதீஷ் கிலாரு மிகப்பெரிய பொருட்செலவில் தயாரித்துள்ள இப்படம் வரும் ஜூன் 4ஆம் தேதி உலகம் […]

KPY பாலாவின் அடுத்த படம் ‘ரீமேட்ச்’ பூஜையுடன் தொடக்கம்!

பேட்மிண்டன் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் தமிழ் சினிமாவின் முதல் காதல் திரைப்படமாக ‘ரீமேட்ச்’ உருவாகிறது. இந்திய சினிமாவில் கிரிக்கெட்டை மையமாக வைத்து ஏராளமான படங்கள் வெளியாகியுள்ள நிலையில், அனைத்து வயதினராலும் விரும்பி விளையாடப்படும் பேட்மிண்டன் விளையாட்டு இதுவரை பெரிய அளவில் திரையில் பிரதிபலிக்கப்படவில்லை. அந்த குறையை போக்கும் விதமாக இளமை, காதல், விளையாட்டு உணர்வுகள் கலந்து உருவாகும் படமாக ‘ரீமேட்ச்’ உருவாகியுள்ளது. ‘கலக்கப் போவது யாரு?’ நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான KPY பாலா இப்படத்தில் கதாநாயகனாக […]