முதலமைச்சர் விஜய்க்கு இயக்குநர் சீனு ராமசாமி கோரிக்கை!

எழுத்தாளர் மற்றும் இயக்குநராக தனித்துவமான படைப்புகளை வழங்கி வரும் சீனு ராமசாமி, தனது புதிய நூலான ‘சினிமாவின் ஆன்மா (சினிமா ரசனைக் கல்வியும் இன்னும் சில கட்டுரைகளும்)’ குறித்து பேசியதுடன், தமிழ்நாடு முதலமைச்சர் விஜய்க்கு முக்கிய கோரிக்கையையும் முன்வைத்துள்ளார். இதுதொடர்பாக வெளியிட்டுள்ள வீடியோவில், பள்ளிகளில் விளையாட்டு, ஓவியம் உள்ளிட்ட நுண்கலைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகின்ற போதிலும், மக்களின் அன்றாட வாழ்க்கையுடன் ஆழமாக இணைந்துள்ள சினிமாவை சரியாகப் புரிந்துகொள்ளும் கல்வி இல்லாதது குறையாக இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இன்றைய குழந்தைகள் […]

ருத்ரா, பிரீத்தி அஸ்ராணி நடித்த ‘எல்லோ எல்லோ டிரிட்டீ பெல்லோ’ படத்தின் டீசர் வெளியீடு

AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் ‘எல்லோ எல்லோ டிரிட்டீ பெல்லோ’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற ருத்ரா மற்றும் நடிகை ப்ரீத்தி அஸ்ரானி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்த படத்தை, குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவமுள்ள விக்கி பாஸ்கர் இயக்குநராக அறிமுகமாகி இயக்கியுள்ளார். இன்றைய Gen Z தலைமுறையின் […]

சாதனை படைத்து வரும் ராம்சரணின் ‘பெத்தி’ டிரைலர்!

மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில், இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள பான்-இந்தியா திரைப்படமான “பெத்தி” படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. கிராமத்து பின்னணியில் ஆக்ஷன் மற்றும் ஸ்போர்ட்ஸ் அம்சங்களுடன் உருவாகியுள்ள இப்படத்தில், பல திறமைகள் கொண்ட விளையாட்டு வீரராக ராம் சரண் மிரட்டலான தோற்றத்தில் காட்சியளிக்கிறார். கிரிக்கெட், மல்யுத்தம் உள்ளிட்ட விளையாட்டு காட்சிகள் டிரெய்லரின் முக்கிய ஹைலைட்டாக அமைந்துள்ளன. ஜான்வி கபூர், சிவராஜ்குமார், ஜகபதி பாபு, […]

‘ஆக்ஷன் கிங்’ அர்ஜுனின் ‘பிளாஸ்ட்’

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அர்ஜுன், அபிராமி, ப்ரீத்தி முகுந்தன் நடித்துள்ள ‘பிளாஸ்ட்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னைத்தில் நடைபெற்றது. அறிமுக இயக்குநர் சுபாஷ் கே. ராஜ் இயக்கியுள்ள இப்படம் வரும் மே 28ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. 🎬 “இது ஆக்ஷன் படம் மட்டுமல்ல; குடும்பத்துடன் அனைவரும் ரசிக்கும் படம்” — இயக்குநர் சுபாஷ் 🎶 “இந்தப் படம் என் திரை இசைப் பயணத்தில் சிறந்த படங்களில் ஒன்று” — இசையமைப்பாளர் ரவி பஸ்ரூர் 👊 […]

இளையராஜாவுடன் இணையும் கார்த்திக் சுப்புராஜ்!

‘பீட்சா’, ‘ஜிகர்தண்டா’, ‘பேட்ட’, ‘மகான்’, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’, ‘ரெட்ரோ’ உள்ளிட்ட வெற்றி படங்களை தொடர்ந்து, இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது 10வது படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார். ஆஸ்கர் விருது பெற்ற சிக்யா என்டர்டெயின்மெண்ட் மற்றும் ஜியோ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்திற்கு, இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இது அவரின் 1540வது படம் என்பது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. “கார்த்திக் சுப்புராஜ் உடன் பணியாற்றுவது மகிழ்ச்சி. இந்தப் படத்தின் பின்னணி இசை தனி […]

கேன்ஸ் திரைவிழாவில் கவனம் ஈர்த்த ‘தாழ் திறவா’

ஆதவ் கண்ணதாசன் – வாணி போஜன் நடிப்பில், பரணி சேகரன் இயக்கத்தில் உருவாகி வரும் ஹாரர் திரில்லர் திரைப்படமான “தாழ் திறவா” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளன. உலகப் புகழ்பெற்ற கேன்ஸ் திரைப்பட விழாவின் இந்தியன் பவிலியனில், இப்படத்தின் டீசர் மே 19 அன்று திரையிடப்பட்டு பாராட்டுகளை பெற்றுள்ளது. தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்கும் வகையில், சர்வதேச ரசிகர்களிடமும் இப்படம் கவனம் பெற்றுள்ளது. பழமையான எழுத்துக்கள், மர்மமான ஆபத்துகள், அமானுஷ்ய சம்பவங்கள் […]

உத்தரா உன்னிகிருஷ்ணன் குரலில் ‘ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்’

இந்திய பக்தி மரபில் மிகவும் போற்றப்படும் ‘ஸ்ரீ வெங்கடேச சுப்ரபாதம்’, இளம் பாடகி உத்தரா உன்னிகிருஷ்ணனின் குரலில் புதிய நவீன வடிவில் வெளியாகியுள்ளது. ஜியோ சாவன், கானா, ஆப்பிள் மியூசிக், ஸ்பாட்டிஃபை, யூடியூப் மியூசிக் உள்ளிட்ட தளங்களில் மே 20 முதல் பாடல் வெளியாகியுள்ளது. லிரிக்கல் வீடியோ மே 23 அன்று Rajshri Soul யூடியூப் சேனலில் வெளியிடப்படுகிறது. எம்.எஸ். சுப்புலட்சுமி பிரபலப்படுத்திய இந்த காலத்தால் அழியாத பக்திப் பாடலுக்கு, புதிய தலைமுறையினரையும் ஈர்க்கும் வகையில் பிரித்வி […]

சிவகார்த்திகேயனின் ‘சேயோன்’ படப்பிடிப்பு மதுரையில் தொடக்கம்

சிவகார்த்திகேயன் சக்திவாய்ந்த புதிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘சேயோன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு, மே 18, 2026 அன்று மதுரையில் தொடங்கியுள்ளதாகராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் டர்மெரிக் மீடியா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளன. இயக்குநர் சிவக்குமார் முருகேசன் இயக்கும் இப்படத்தில், நடிகை பாக்யஸ்ரீ போர்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்துள்ளார். கிராமிய பின்னணியில் உருவாகும் இப்படம், அதிரடி, குடும்ப உணர்வுகள் மற்றும் எமோஷனல் தருணங்கள் நிறைந்த முழுமையான விருந்தாக அமையும் என கூறப்படுகிறது. படப்பிடிப்பை கமல்ஹாசன் நேரில் கலந்துகொண்டு தொடங்கி வைத்து, படக்குழுவினருக்கு […]