சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கி வெளியான ‘கூலி’ படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இருப்பினும் வசூல் சாதனை படைத்து வருகிறது. இப்படத்தில், தேவா என்ற கதாபாத்திரத்தில் ரஜினியும், சைமன் என்ற நெகட்டிவ் ரோலில் நாகார்ஜூனாவும் மிரட்டியுள்ளனர்.
இந்நிலையில், நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் வாய்ப்பு ‘நித்தம் ஒரு வானம்’ படத்தை இயக்கிய ரா.கார்த்திக் வசம் வந்துள்ளது. அசோக் செல்வன், ரிது வர்மா, அபர்ணா பாலமுரளி உள்பட பலர் நடித்த படம், ‘நித்தம் ஒரு வானம்’.
கடந்த 2022-ம் ஆண்டு வெளியான இப்படம் வரவேற்பைப் பெற்றது. ரா.கார்த்திக் இயக்கியிருந்தார். இந்நிலையில், நாகார்ஜுனாவின் 100-வது படத்தை இயக்கும் வாய்ப்பை ரா.கார்த்திக் பெற்றுள்ளார். இது குறித்து நாகார்ஜூனா தெரிவிக்கையில், ‘தமிழ் இயக்குநர் ரா. கார்த்திக் இயக்கத்தில் என்னுடைய 100-வது படம் உருவாகிறது. இந்த படத்தை மிக பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டிருக்கிறோம்.
‘கூலி’ தற்போது வெளியாகியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படுகிறது. இது ஆக்ஷன், ஃபேமிலி சென்டிமென்ட், டிராமா கலந்து உருவாகும் படம். இதில், நான் கதாநாயகனாக நடிக்கிறேன்’ என்றார்.