‘முதல் முத்தம் மறக்க முடியாதது’ என பகிர்ந்துள்ளார் நாக சைதன்யா. இது குறித்த தகவல்கள் காண்போம்..
சமந்தாவுடன் விவாகரத்து பெற்ற நாக சைதன்யா, சோபிதா துலிபாலாவை மணந்தார். தற்போது இருவரும் தங்கள் திருமண வாழ்க்கையை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில், தனது முதல் முத்தம் குறித்து நாக சைதன்யா வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
அவரது முதல் முத்தம் அவரது முதல் காதலி சமந்தாவிற்குத்தான் கொடுத்திருப்பார் என எல்லோரும் நினைப்பார்கள். ஆனால், அவர் சமந்தாவிற்கு கொடுக்கவில்லை. அதற்கு முன்பே வேறொரு பெண்ணுக்குக் கொடுத்துவிட்டார். மேலும், அந்த முத்தம் தனது வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் என தெரிவித்துள்ளார்.
ராணா நடத்திய நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நாக சைதன்யாவிடம், முதல் முத்தம் யாருக்குக் கொடுத்தாய்? என ராணா கேட்டதற்கு, ‘ஒன்பதாம் வகுப்பில் ஒரு பெண்ணுக்குக் கொடுத்ததாகத் தெரிவித்தார். மேலும், அந்த முத்தம் தனது வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் என கூறினார்.
மேலும் மற்றொரு சுவாரஸ்யமான தகவலையும் சைதன்யா பகிர்ந்து கொண்டார். ஒரு ரசிகர் தன்னை அணுகி, சமந்தாவை விட நீங்கள்தான் வெண்மையாக இருக்கிறீர்கள் என கூறியது மறக்க முடியாத நினைவு என்றும் தெரிவித்தார். தற்போது இந்த சுவாரஸ்ய தகவல் வைரலாகி வருகிறது.