தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதைக்களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் சிங்காரம் சூர்யாவிற்கு ஆடு புலி ஆட்டம் எப்படி ஆடுவது என சொல்லிக் கொடுக்க சூர்யாவும் கற்றுக்கொள்கிறார். உடனே சூர்யா நந்தினி காயை மாற்றி வைக்க சூர்யா அதை ஏன் நந்தினி வெச்ச இத வெச்சி இருக்கனும் என்று சொல்ல புனிதா இல்ல இல்ல இத நான் ஒத்துக்க மாட்டேன் அக்கா தோத்துருப்பா சூர்யா சார் தான் இப்படி பண்ணிட்டாரு என்று சொல்ல அப்போ உங்க சூர்யா சாருக்கு தான் விளையாட தெரியும் எனக்கு தெரியாதா என்று நந்தினி கேட்க அதற்கு ரஞ்சிதா அப்ப சூர்யா சாருக்கும் நந்தினி அக்காவுக்கும் போட்டி வச்சுக்கலாம் என சொல்லி இருவரும் விளையாட ஆரம்பிக்கின்றனர். உடனே விளையாட்டில் சூர்யா ஜெயிக்க நந்தினியிடம் தேங்க்ஸ் நந்தினி என்று சொல்லுகிறார் எதுக்கு என்று நந்தினி கேட்க விட்டுக் கொடுத்ததற்கு என்று சூர்யா சொல்லுகிறார் அப்படியெல்லாம் இல்ல நீங்க நல்லா தான் விளையாட கத்துக்கிட்டீங்க என்று சொல்லுகிறார்.
உடனே சூர்யாவுக்கு போன் வர அவர் பேசிக் கொண்டிருக்க சிங்காரம் குடும்பத்தினருடன் வருகிறார். நீங்களும் எதுக்கு மாடிக்கு வந்துட்டீங்க என்று கேட்க ரஞ்சிதா போர் அடிக்குது என்று சொல்லுகிறார். புனிதா கண்ணாமூச்சி விளையாடலாம் என்று சொல்லி இருப்பதிலேயே நீ தான் சின்னவ நீ முதல்ல கண்டுபிடி என்று சொல்லி ரஞ்சிதாவின் கண்ணை கட்டி விட்டு விளையாட ஆரம்பிக்கின்றனர். மாத்தி மாத்தி அவுட் ஆக நந்தினி கண்ணை கட்டி கண்டுபிடிக்க சூர்யாவை கட்டிப்பிடித்து விடுகிறார். பிறகு சூர்யாவின் கண்ணை கட்டி விட ரஞ்சிதா நந்தினியை தள்ளிவிட சூர்யா நந்தினி கட்டிப்பிடித்து விடுகிறார்.
மாதவி தனியாக நின்று கொண்டிருக்க சுந்தரவல்லி தூங்கலையா என்று கேட்க தூங்குற மாதிரியா இந்த வீட்டில் நடக்குது என்று கேட்கிறார். இந்த சூரியா பண்றதெல்லாம் எப்படி இருக்கு பாருங்க என்று சொல்ல, அந்தக் குடும்பம் இங்கே வந்திருக்கு அப்பா சப்போர்ட் பண்ணிக்கிட்டு இருக்காரு இதை எல்லாம் பார்த்தா நீங்க டென்ஷன் ஆவிங்க என்று சொல்ல, சுந்தரவல்லி இப்ப மட்டும் எந்த டென்ஷனும் இல்லாமையா இருக்கேன் அவ்வளவு கோவம் இருக்கு நான் அவர்கிட்ட சண்ட போட கூடாதுன்னு முடிவு பண்ணி இருக்கேன் எனக்கு யார் மேல பகையோ அவங்க கிட்ட தான் என்னோட கோபத்தை காட்டுவேன் என்று சொல்லுகிறார். ஆனா ஏற்கனவே அந்த குடும்பம் தூர இருந்துச்சு இவை என்ன நடந்தாலும் அழுதுகிட்டு இருப்பா ஆனா இப்போ சும்மா சும்மா அங்க போயிடுவா சூர்யா இப்பவே அங்க தங்கிட்டான் பிறகு ஒட்டுமொத்தமாக தங்கிட்டான்னா என்ன பண்ணுவீங்க என்று கேட்க சுந்தரவல்லி சிரிக்கிறார். என்னமா சிரிக்கிறீங்க என்று கேட்க அந்த குடும்பத்தை இந்த ஊருக்கு கொண்டு வந்தது நான் தான் எல்லாமே என்னோட பிளான் தான் என்று சொல்லுகிறார். எதுக்குமா இப்படி பண்றீங்க என்ற டென்ஷனாக எல்லாத்துக்கும் காரணம் இருக்கு மாதவி. அவளுக்கு ஏதாவது பிரச்சனை என்றால் யார் அவளுக்கு ஆறுதலா இருப்பாங்க சூர்யாவும் அப்பாவும் தான ஆனா இப்போ அவளை இங்க அடிச்சா உடனே அங்க தான் போவா அதுக்காக தான் வர வெச்சேன் என்று சொல்ல மாதவியும் சூப்பர் என்று சொல்லி சந்தோஷப்படுகிறார். இதையெல்லாம் ரேணுகா மறைந்திருந்து கேட்டு சொல்ல வேண்டிய இடத்துல சொல்லிடனும் என்று முடிவு எடுக்கிறார். மறுபக்கம் சூர்யா நந்தினி குடும்பத்திடம் சந்தோஷமாக சிரித்து பேசிக் கொண்டிருக்கிறார்.
அந்த நேரம் பார்த்து இடி இடிக்க நந்தினி அலறிக்கொண்டு போய் ரஞ்சிதாவை கட்டிப்பிடிக்க சூர்யா என்னாச்சு என்று கேட்க இடி சத்தம் கேட்டா போதும் பக்கத்துல யாரு இருந்தாலும் வந்து கட்டிப்புடிச்சிடும் என்று சொல்ல சூர்யா அப்படியா என்று கேட்கிறார். நான் தைரியமான பொண்ணு தானே நெனச்சேன் என்று சொல்ல எனக்கு தெரியல சார் சின்ன வயசுல இருந்து இப்படி ஆகிடுச்சு என்று சொல்லுகிறார். அதுக்கும் ஒரு காரணம் இருக்கு தம்பி இவளுக்கு எட்டு வயசு இருக்கும் போது வீட்டில் இடி விழுந்து தீப்பிடிச்சுடுச்சு அப்போ வீட்ல இருந்தா கரவை மாடு ஒன்னு இறந்துடுச்சு அதை பார்த்ததிலிருந்து இப்படி ஆகிட்டா என்று சொல்ல, சூர்யா தைரியமாக இருக்கச் சொல்லுகிறார். பிறகு அம்மாச்சி சமைக்க சென்று விடுகிறார். ரேணுகா அர்ச்சனாவுக்கு போன் போட்டு என்ன பிரச்சனைன்னு தெரிஞ்சதா என்று கேட்க அந்த நந்தினியோட ஊருக்கு ரெண்டு பேரும் போயிட்டு வரும்போது நாலு பேர கூட்டிக்கிட்டு வந்திருக்காங்க குடும்பத்தோட இங்க வந்து பால் காய்ச்சு சந்தோஷமா இருக்காங்க என்று சொல்ல, இதெல்லாம் சுந்தரவல்லிக்கு தெரிஞ்சா சும்மா இருக்க மாட்டாங்களே என்று சொல்ல மொத்த குடும்பத்தையும் வரவெச்ச பிளானே சுந்தரவல்லி அம்மாவோடது தான் என்று சொல்ல அர்ச்சனா அதிர்ச்சி அடைகிறார்.
நந்தினிக்கு குடைச்சல் கொடுத்த அவ பொசுக்கு பொசுக்குன்னு அவங்க வீட்டுக்கு போயிட்டானா சூர்யா சார் கிட்ட இருந்து பிரிச்சிடலாம்னு தான் இந்த பிளான் போட்டு இருக்காங்க இப்போ சூர்யா சாரும் நந்தினி கூட அவங்க வீட்ல தான் இருக்காரு என்று சொல்ல, அவன் எதுக்கு அங்க இருக்கான் அங்க ஒரு நிமிஷம் கூட அவன் இருக்கக்கூடாது என்று கோபப்படுகிறார்.சூர்யா நந்தினி குடும்பத்தினருடன் உட்கார்ந்து சாப்பிட நந்தினி தோசை வைக்கிறார் அம்மாச்சி தோசை புடிச்சிருக்கா தம்பி என்று கேட்க என்ன தோசை இது வித்தியாசமா இருக்கு என்று கேட்க, அம்மாச்சி இது கம்பு தோசை என்று சொல்ல கம்பு தோசையா என்று பேசிக்கொண்டே ஒரு வாய் சாப்பிட அம்மாச்சி நல்லா இருக்கா தம்பி என்று கேட்க நல்லா இருக்குது என்று இழுக்க உடனே அம்மாச்சி அப்ப இது உங்களுக்கு பிடிக்கல இனிமே இத செய்ய மாட்டேன் என சொல்லுகிறார் உடனே ரஞ்சிதா இத்தனை நாளா நான் சொன்னா மட்டும் இந்த அம்மாச்சி கேக்கவே இல்ல இப்ப சூர்யா சார் சொன்ன உடனே கேக்குது என்று சொல்ல சூர்யா இனிமே உனக்கு எது பிடிக்காதோ அதை என்கிட்ட சொல்லு நான் சொல்லிடுறேன் என சூர்யா சொல்ல ரஞ்சிதாவும் சரி என சொல்லுகிறார்.
சிங்காரம் எத்தனை நாள் ஆச்சு இது மாதிரி ஒன்னு மன்னா உட்கார்ந்து சந்தோஷமா சாப்பிட்டு இன்னைக்கு தான் மனசு நிம்மதியா இருக்கு என்று சொல்லுகிறார். ஆமாப்பா ஊர்ல பிரச்சனையாகி இங்க வந்தபோது மனசே கலங்கி ஒரு மாதிரியா இருந்தது இப்ப எல்லாரும் கூடயும் பேசிகிட்டு இருக்கிறது அப்பாடின்னு இருக்கு என்று சொல்லுகிறார். உடனே அம்மாச்சி நந்தினி உங்கிட்ட ஒன்னு சொல்றேன் பக்கத்துல தான் வீடு இருக்கேன்னு பொசுக்கு பொசுக்குன்னு வந்துடக்கூடாது நீ தம்பி கூட வாழ அது தான் உன் வீடு அதை மனதில் வைத்துக் கொள் என்று சொல்ல பாருப்பா அம்மாச்சி என்ன வீட்டுக்கு வரக்கூடாது சொல்லுது என்று சொல்ல அதற்கு சிங்காரம் அப்படி சொல்லலம்மா அவங்க சொல்றதும் சரிதாம்மா எப்ப பாத்தாலும் பிறந்து வீட்டுக்கு வந்துட்டா வாழற வீட்டுக்கு எப்படி முழுசா வாழ்ந்த மாதிரி இருக்கும் என்று கேட்க இப்படி எல்லாம் சொல்லி சொல்லி அக்காவை வரவிடாம பண்ண போறீங்களா என்று சொல்ல நந்தினி இவங்க என்ன வேணா சொல்லட்டும் நான் வரது வந்துட்டு தான் இருப்பேன் என சொல்லுகிறார். இத்துடன் எபிசோட் முடிகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி சூர்யாவிடம் இங்க புழுக்கம் அதிகமா இருக்கு நீங்க வேணா வீட்டுக்கு போறீங்களா என்று கேட்கிறார். மறுபக்கம் அருணாச்சலம் கீழே விழுந்து அவருக்கு அடிபட்டு விடுகிறது.
இதனால் ரேணுகா சூர்யாவிற்கு ஃபோன் போட்டு அருணாச்சலத்திற்கு அடிபட்ட விஷயத்தை சொல்லுகிறார். உடனே நந்தினி சூர்யா ஹாஸ்பிடல் வர நந்தினி இது விபத்ப்தோ, தற்செயலோ இருந்தாலும் இதற்கு காரணம் நான் தான் என்று நினைப்பாங்க இவங்கள தாண்டி சூர்யா சாருக்கு துணையா நான் எப்படி நிக்க போறேன் என்று நந்தினி யோசிக்கிறார். என்ன நடக்கப்போகிறது என்று இனிவரும் எபிசோடுகள் பார்த்து தெரிந்து கொள்வோம்.