தமிழ் சின்னத்திரையில் சன் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு முடிச்சு. நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா, அ. சுரேஷ்பாபு தயாரிப்பிலும் ஒரு அழகான கிராமத்து கதை களத்துடன் இந்த சீரியல் உருவாகியுள்ளது. இதுவரை எந்த ஒரு சீரியலிலும் இல்லாத அளவிற்கு இயற்கை பொருந்திய லொகேஷன் அமைந்துள்ளது.
நேற்றைய எபிசோடில் நந்தினி சூர்யாவிடம் பணம் ரெடி பண்ணியாச்சு வாங்க போகலாம் உங்க அம்மா கிட்ட முதல்ல இந்த பணத்தை கொடுக்கணும் என்று சொல்லி கூப்பிட,எப்படி ரெடி பண்ண யார்கிட்ட வாங்கினேன் என்று சூர்யா கேட்கிறார். ரெண்டு லட்சம் என்பது பெரிய காசு யார் கொடுத்தாங்க என்று கேட்க, அதெல்லாம் சொல்ல முடியாது என்று நந்தினி சொல்லி விடுகிறார். யாருமே தெரியாத இடத்துல ஒருத்தர் வந்து பணம் கொடுத்துட்டு போறார் என்றால் கருப்பு சாமியோட பவர் இல்லாமையா என்று சொல்லிவிட்டு இப்பவே இந்த பணத்தை வீட்ல கொடுக்கணும் என்று சொல்ல, சூர்யா அந்த நேரம் பார்த்து போன் பண்ணுவதாக சொல்லி வெளியில் வந்து அருணாச்சலத்திற்கு போன் போட்டு நம்ம போட்ட பிளான் பக்காவா ஒர்க் அவுட் ஆயிடுச்சு என்று சொல்ல, நந்தினி அவ்வளவு சீக்கிரம் நம்ப மாட்டாலே என்று கேட்க, சூர்யா நடந்து விஷயத்தை அருணாச்சலத்திடம் சொல்லுகிறார்.
இப்ப என்ன நந்தினி பணத்த எடுத்துக்கிட்டு இங்கதான் வரப்போறா என்று கேட்க ஆமா டாடி தாய்க்குலத்து கிட்ட அந்த பணத்தை கொடுக்கணும் அந்த சீனை நான் பாக்கணும் என்று சொல்லி தாய் குலத்தை எங்கேயும் போக விடாம அங்கே உட்கார வைங்க என்று சொல்லிப் போனை வைக்கிறார். மறுபக்கம் நந்தினி விஜிக்கு போன் போட்டு நடந்த விஷயத்தை சொல்ல அவரும் ஆச்சரியப்படுகிறார். இது மாதிரி வட்டி கொடுக்கிறது கொடுங்கள் எல்லாம் யாருமே சொல்ல மாட்டாங்க என்று சொல்ல பிறகு தெரிஞ்சவர்தான் என்று சொல்லுகிறார். இப்போ என்ன செய்யப் போற நந்தினி என்று கேட்க, வேற என்ன அவங்க கிட்ட எடுத்துக்கிட்டு போய் கொடுக்க வேண்டியதுதான் என்று சொல்லுகிறார். சரி நந்தினி உனக்கு பணம் கொடுத்தவருட நம்பர் எனக்கு அனுப்புறியா நானும் கேட்டு பாக்குறேன் என சொல்ல நந்தினியும் அவரது நம்பரை அனுப்பி வைக்கிறார். போன் பேசிட்டிங்களா என்று சூர்யாவிடம் நந்தினி கேட்க ஆமா டாடி கிட்ட நீ வரப்போற விஷயத்தைதான் சொன்னேன் என சொல்லுகிறார்.
சிங்காரம் சாப்பிட்டு போகலாம் என்று சொல்ல எனக்கு ஓகே தான் நாளைக்கு கூட போகலாம் என்று சொல்ல நந்தினி இப்பவே போகணும் என்று சொல்லுகிறார். நந்தினி பணத்த கொடுக்கிறதோடு நிறுத்திக்கோ சண்டை எல்லாம் போடாத என்று சிங்காரம் சொல்ல, நந்தினி இப்ப யார் சண்டை போட போறதா சொன்னது அதெல்லாம் ஒன்னும் இல்ல நான் பணத்தை திருப்பி தருவேன் அவ்வளவுதான் என சொல்லிவிட்டு கிளம்புகின்றனர். அவர்கள் கிளம்பிய உடன் அம்மாச்சி நந்தினிக்கு இவ்வளவு வைராக்கியம் இருக்கு என்று ஆச்சரியமாக பேசுகிறார். நந்தினி இடம் சூர்யா நீ ரொம்ப பெரிய ஆள் தான் நந்தினி இரண்டு லட்சத்தை யாருமே தெரியாத ஊர்ல ரெடி பண்ணி இருக்க என்று சொல்ல, எல்லாத்துக்குமே காரணம் கருப்பசாமி தான் என்று சொல்லுகிறார். எனக்கும் ஏதாவது பணம் தேவைப்பட்டால் உன்னை கேட்கலாம் போலையே என்று சொல்ல உங்களுக்கு என்ன சார் நீங்க சரக்கு டப்பாவை ஐயாயிரத்துக்கு வாங்குறீங்க என்று சொல்ல ஜஸ்ட் 5000 தானே என சூர்யா சொல்ல அந்த 5000 ல வீட்டு வாடகை கொடுக்கலாம் குடும்பமே ஒரு மாசத்துக்கு சாப்பிடலாம் என லிஸ்ட் போட்டு கொண்டே போகிறார். எல்லாத்துலயுமே நம்ம கரெக்டா இருக்கணும்னு நினைச்சா ரொம்ப கஷ்டம் நந்தினி என்று சொல்லுகிறார்.
இந்த பணத்தை எடுத்துக்கிட்டு போய் வீட்ல கொடுத்தாதான் உனக்கு நிம்மதி,நிம்மதியா தூங்குவ அப்படித்தானே என்று சொல்ல நந்தினி ஆமாம் என்று சொல்லுகிறார். விஜி போன் போட்டு நீ கொடுத்த நம்பர் சரியான நம்பர் தானா என்று கேட்க கரெக்ட் தான் என்று சொல்லுகிறார். நான் போன் பண்ணா திமிரா பேசுனாரு என்று சொல்ல, பிறகு விஜி கன்னியப்பன் இடம் பேசியதை சொல்ல என்கிட்ட பொறுமையா தான் பேசினார் என்று சொல்ல நீ வேணும்னா வேற ஒரு போன்ல இருந்து பண்ணி பேசி பாரு அப்போ தெரியும் என்று சொல்ல உடனே சூர்யாவின் நம்பரில் இருந்து போன் போடுகிறார். உடனே போனை எடுத்தவுடன் கன்னியப்பன் நீங்க சொன்ன மாதிரி போஸ்டர் ஒட்டி ஒரு பொண்ணுக்கு பணத்தை கொடுக்க சொன்னிங்க ஆனா எல்லாரும் போன் பண்ணி பணம் கேக்குறாங்க தயவு செய்து ஏதாவது பண்ணுங்க என்று சொல்லி உண்மையை சொல்லிவிட நந்தினி கோபப்பட்டு காரை நிறுத்துங்கள் என்று சொல்லி சூர்யாவிடம் பணத்தை கொடுக்கிறார். என்ன நடந்துச்சுனு நான் சொல்றேன் என சொல்ல எல்லாத்தையும் அவரே சொல்லிட்டாரு இதுக்கு மேல எதையும் சொல்ல வேண்டாம் என சொல்லி காரில் இருந்து இறங்கி கோவமாக நடந்து செல்ல சூர்யாவும் பின்னாலையே வருகிறார்.
நான் வேணும்னே பண்ணல நந்தினி என்று சொல்ல, அப்போ வேற என்ன பண்ணிங்க,உங்ககிட்ட காசு பணம் இருந்தா என்ன வேணா பண்ணுவீங்களா எனக்கு தெரியாம என்னை ஏமாத்தி எதுக்கு இப்படி பண்ணிங்க இவ்ளோ நேரம் என்கிட்ட ஒண்ணுமே தெரியாத மாதிரி பேசிட்டு வந்தீங்க என்று கேட்க நான் என்னமோ உன்னை ஏமாத்துன மாதிரி பேசிக்கிட்டு இருக்க நீ ரொம்ப கஷ்டப்படுறதுனால உனக்கு தெரியாம ஹெல்ப் பண்ணனும்னு நெனச்சேன் அவ்வளவுதான் என்று சொல்லுகிறார். உங்களுக்கு எல்லாமே அவ்வளவுதான் நான் எதுவுமே செய்யாத அப்பவே எல்லா பழியும் என் மேல விழுது உங்கள லவ் பண்ணி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்னு ஆரம்பிச்சது திருட்டுப்பழி வரைக்கும் வந்து நிக்குது என்ன துன்புறுத்துவது மட்டுமில்லாமல் இதுல என் தங்கச்சியையும் இழுத்து விடுறீங்க.. இதை யார்கிட்டயாவது சொன்னாதானே பிரச்சனை? நீயும் சொல்லாத நானும் சொல்ல மாட்டேன் என்று சொல்ல நான் என்ன பேசுறேன்னு உங்களுக்கு புரியல தயவு செஞ்சு என்ன விட்ருங்க ஏழப்பட்டவர்கள் எதுக்கு கோபப்படுவார்கள் எந்த இடத்துல அவங்களுக்கு வைராக்கியம் பிறக்கும் என்று உங்களுக்கு தெரியாது என்று சொல்லுகிறார். சரி சொல்லு நந்தினி நான் புரிஞ்சுக்கிறேன் என்று சொல்ல நீங்க விளையாடுறது என்னோட சுயமரியாதையோட நான் எவ்வளவு அவமானப்பட்டு இருக்கேன் காயப்பட்டு இருக்கேன்னு உங்களுக்கு தெரியாது நீங்க வேணா உங்க அம்மாவை வெறுப்பேத்துறதுக்கு ஒரு வாய்ப்பா தெரியலாம் ஆனா எனக்கு அப்படி இல்ல என் மனசு எல்லாம் ரணமா இருக்கு, என்ன விட்ருங்க நான் அந்த பணத்தை திருப்பிக் கொடுக்காமல் அந்த வீட்டுக்கு வரமாட்டேன் என சொல்லி நடந்து செல்ல சூர்யா நந்தினி பின்னாலே வந்து இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை நந்தினி நீ எதுக்கு இப்படி எல்லாம் பேசுற நான் பாத்துக்குறேன் என சொல்லுகிறார் நான் மட்டும் இல்ல டாடியும் ஆசைப்படுறாரு என்று சொல்ல உடனே நந்தினி ஆட்டோவை நிறுத்தி அதில் ஏறும்போது, வந்தா பணத்தோடு தான் வருவேன் ஐயா கிட்ட சொல்லிடுங்க சார் என்று சொல்லிவிட்டு ஆட்டோவில் ஏறி சென்று விடுகிறார். இத்துடன் எபிசோட் முடிவடைகிறது.
இன்று வெளியான ப்ரோமோவில் நந்தினி குடும்பத்தினரிடம் நம்ம வீடு தேடி வந்து ஒரு ஆள் பணம் கொடுத்தது யாரும் இல்லை சூர்யா சாரோட ஆளுதான் என்று சொல்லுகிறார். பிரச்சனை வந்தா அங்க ஓடி போயிற்றா பின்னாலே சூர்யாவும் போயிடுறான் இது இப்படியே விடக்கூடாது இல்லை என்று மாதவி சொல்லுகிறார்.
நந்தினி மேல பொய்யா ஒரு பழி போட்டு அவளை வீட்டை விட்டு அனுப்பிவிட்டு இவ்வளவு கேவலமா சந்தோஷமா இருக்காங்களே டாடி இப்பவே இவங்க சந்தோஷத்துல மண்ணள்ளி போறேன் என உள்ளே வருகிறார். என்ன நடக்கப்போகிறது என்று எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.