மம்முட்டி-மோகன்லால் இணைந்து நடித்த ‘பேட்ரியாட்’ பட பர்ஸ்ட் லுக் வெளியீடு..

நயன்தாரா நடித்துள்ள பேட்ரியாட்’ படத்தின் தகவல்கள் பார்ப்போம்…

மம்முட்டி, மோகன்லால் இருவரும் 19 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடித்துள்ள படம், ‘பேட்ரியாட்’. மலையாளத்தில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற ‘டேக் ஆஃப்’, ‘மாலிக்’ படங்களுக்குப் பிறகு மகேஷ் நாராயணன் இயக்கியுள்ள இப்படத்தில் பகத் பாசில், நயன்தாரா, ரேவதி, குஞ்சாக்கோ போபன், கிரேஸ் ஆண்டனி, இந்திரன்ஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

மெகா பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம், தமிழ், தெலுங்கு, இந்தியில் வெளியாக இருக்கிறது.

இந்நிலையில் இப்படத்தில் நயன்தாரா, பகத் பாசில், குஞ்சாக்கோ போபன் ஆகியோரின் முதல் தோற்ற போஸ்டர் வெளியிடப்பட்டு உள்ளது. நயன்தாராவின் போஸ்டரில், அவர் முகம் மட்டும் ஆக்ரோஷமான தோற்றத்தில் இருக்கிறது. இப்போஸ்டர்கள் இணையத்தில் வரவேற்பைப் பெற்றுள்ளன.

முன்னதாக, நயன்தாரா தெலுங்கில் சிரஞ்சீவியுடன் மீண்டும் இணைந்து நடித்த ‘மனசங்கர குரு’ படம் வரவேற்பு பெற்று வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.

mammootty and mohanlal act in patriot movie updates
Mammoottymohanlalpatriot movieநயன்தாராபகத் பாசில்