மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி எப்போது தெரியுமா? லேட்டஸ்ட் அப்டேட் இதோ..!

மதராஸி படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

madharasi movie release date update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பையும் வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.

அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராஸி என்ற திரைப்படத்திலும் சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் வரும் பிஸியாக நடித்து வருகிறார்.

வித்யுத் ஜம்வால்,விக்ராந்த், சபீர்,பிஜு மேனன் போன்ற பல பிரபலங்கள் நடித்து வரும் மதராஸி படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீஸ் தேதி குறித்து தகவல் வெளியாகி உள்ளது அதாவது செப்டம்பர் 5ஆம் தேதி மிலாடி நபி வாரத்தை ஒட்டி வெளியிட அதிக வாய்ப்பு உள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

madharasi movie release date update
madharasi moviemadharasi movie release date updaterelease dateupdateசபீர்பிஜு மேனன்மதராஸிவிக்ராந்த்வித்யுத் ஜம்வால்