மதராசி : ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் எப்போது தெரியுமா? சூப்பர் அப்டேட் இதோ.!!

மதராசி படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரிலீஸ் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.


madharasi movie first single release update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அமரன் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.

அதனைத் தொடர்ந்து ஏ.ஆர் முருகதாஸ் இயக்கத்தில் மதராசி என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு முடிந்த நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

மேலும் ருக்மணி வசந்த், விக்ராந்த், டான்சிங் ரோஸ் சபீர், வித்யூத் ஜம்முவால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தத் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் ஐந்தாம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில், தற்போது ஃபர்ஸ்ட் சிங்கிள் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் அடுத்த வாரம் வெளியாகும் என்ற தகவல் வந்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


madharasi movie first single release update
first singlemadharasi moviemadharasi movie first single release updatereleaseupdateடான்சிங் ரோஸ் சபீர்ருக்மணி வசந்த்விக்ராந்த்வித்யூத் ஜம்முவால்