தொடர்ந்து வரும் பட வாய்ப்புகள்: நடிகை கயாது லோகர் உற்சாகம்..

கயாது லோகர் நடிக்கும் மலையாள சினிமா பற்றிய தகவல்கள் பார்ப்போம்..

டொவினோ தாமஸ், கயாது லோகர் நடிக்​கும் படம் ‘பள்ளிச்​சட்​டம்​பி’. டிஜோ ஜோஸ் ஆண்​டனி இயக்​கி​யுள்ள இப்​படத்​தின் கதை 1950–60-களில் நடப்​பது போல அமைக்​கப்​பட்​டு உள்​ளது.

வேர்ல்ட்​வைட் பிலிம்ஸ் சார்​பில் நவுஃபல் மற்​றும் பிரிஜீஷ், சி க்யூப் ப்ரோஸ் என்​டர்​டெ​யின்​மென்ட்ஸ் சார்​பில் சாணக்​கியா சைதன்யா சரண் ஆகியோர் தயாரிக்​கின்​றனர். மலை​யாளத்​தில் உரு​வாகும் இப்​படம் தமிழ், தெலுங்​கு, இந்​தி, கன்னடம் என 5 மொழிகளில் ஏப்ரல்​.9-ந்தேதி வெளி​யாக உள்​ளது. ஜேக்ஸ் பிஜாய் இசை அமைக்​கிறார். டிஜோ டோமி ஒளிப்​ப​திவு செய்கிறார்.

இப்​படத்​திலிருந்​து, ‘காட்டு செண்​பகம்’ என்ற பாடல் வெளி​யாகி இருக்​கிறது. தமிழ்ப் பதிப்​புக்கான பாடலை மோகன் ராஜன் எழு​தி​யுள்​ளார். அகில் ஜே.சந்த், ஆவ்னி மல்​ஹர் பாடி​யுள்ள இப்​பாடல் வரவேற்​பைப் பெற்று வரு​கிறது. கயாது லோகர், தமிழில் ‘டி​ராகன்’ படத்​தில் நடித்​ததன் மூலம் கவனிக்​கப்பட்​டார்.

‘இத​யம் முரளி’ உள்பட சில தமிழ்ப் படங்​களில் நடித்து வருகிறார்​. இது தொடர்பாக கயாது லோகர் தெரிவிக்கையில், ‘டிராகன்’ படம் என் திரைப் பயணத்தை மாற்றி விட்டது. அந்த ஒரு படம் என் முன்னேற்றத்திற்கு காரணமாக இருக்கிறது’ என கூறியுள்ளார்.

kayadu lohar in period film with tovino thomas
'டிராகன்' படம்Kayadu Loharperiod moviestoryகயாது லோகர்