ரவிமோகனின் மைண்ட் வாய்ஸ் குறித்து சிவகார்த்திகேயன்..

ரவிமோகன் ஸ்டுடியோஸ் திறப்பு விழா சென்னையில் நடந்தது. விழாவில் கெனிஷாவுடன் வந்தார் ரவி மோகன். இருவரும் வெள்ளை நிற உடை அணிந்து நடந்து வந்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

ஜெனிலியா, தன் காதல் கணவரான ரித்தேஷ் தேஷ்முக்குடன் வந்திருந்தார். சிவராஜ்குமார் சிவகார்த்திகேயன், கார்த்தி, யோகிபாபு ஆகியோரும் வந்திருந்தார்.

சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகி வரும் ‘பராசக்தி’ படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ரவி மோகன். இந்நிலையில் நிகழ்ச்சிக்கு வந்தவர்களிடம் ரவிமோகனின் மைண்ட் வாய்ஸ் பற்றி கேட்கப்பட்டது. கார்த்தியிடம் கேட்டதற்கு,

‘தயாரிப்பாளர்கள் ஆனவர்களின் கஷ்டம் தயாரிப்பாளர்களுக்கு தான் தெரியும் என்று சிவா சொல்லிட்டாரே. அதனால், அந்த ப்ரொடக்சனுக்குள்ள நான் போகவே இல்லை. ரஜினி சார் வரைக்கும் அட்வைஸ் பண்ணார். ப்ரொடக்சன் மட்டும் வேண்டாம் என்றார்.

ஆனால், ரொம்ப அழகாக திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் ரவி. இவ்வளவு சீக்கிரமாக ஒரு பிளாட்ஃபார்ம் தயார் செய்து லான்ச் நடக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. இவ்வளவு கிராண்டாக ஒரு விஷயத்தை நான் எதிர்பார்க்கவில்லை’ என்றார்.

ரவிமோகனின் மைண்ட் வாய்ஸ் குறித்து சிவகார்த்திகேயன் கூறியதாவது, ‘இன்றைய விழாவை நல்லபடியாக நடத்தி முடிக்கணும். படத்தை சரியாக எடுக்கணும். அதுவரை மூஞ்சியை சிரிச்ச மாதிரியே வச்சுக்கணும்னு அவர் உட்கார்ந்திருக்கிறார்’ என்றார். அதைக்கேட்ட ரவிமோகனோ, ‘நம்ம மைண்ட் வாய்ஸை அப்படியே வெளியே சொல்கிறாரே இந்த சிவகார்த்திகேயன்’ என்பது போல சிரித்தார். உங்களால் என்ன முடியுமோ, அதை சிறப்பா செஞ்சுட்டீங்க ப்ரோ’ என்பது போன்று சிவாவை பார்த்து கையை காட்டினார் ரவிமோகன்.

karthi interesting information in ravi mohan studios launch event
actor karthiactor ravimohanactor sivakarthikeyanசிவகார்த்திகேயன்ரவிமோகன்