கங்குவா படத்தின் எடிட்டர் மரணம், திரையுலக பிரபலங்கள் இரங்கல்..!

கங்குவா படத்தின் எடிட்டர் மரணமடைந்துள்ளார்.

kanguva movie editor nishad yusuf pasess away

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் நவம்பர் 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று திரையரங்கில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.

இந்நிலையில் யாரும் எதிர்பாராத விதமாக இந்த படத்தின் எடிட்டரான நிஷாத் யூசுப், இன்று அதிகாலை கொச்சியில் உள்ள அவரது குடியிருப்பில் இறந்துள்ளார்.

இந்த தகவல் ரசிகர்கள் மற்றும் திரையுலகினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவருக்கு வயது 43 என்பது குறிப்பிடத்தக்கது. ரசிகர்கள் திரையுலக பிரபலங்கள் என பலரும் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

editorkanguva moviekanguva movie editor nishad yusuf pasess awaynishad yusufpasess awayகங்குவாசூர்யாநிஷாத் யூசுப்