நான் ராமர் இல்லை, அவருடைய அப்பா வழி: வைரலாகும் கமலின் கல்யாண கருத்து

மணிரத்னம் இயக்கிய ‘தக் லைஃப்’ பட ஜிங்குச்சா பாடல் வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தெரிவித்த தனது ‘கல்யாணம் பற்றிய கருத்து’ தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது, விழாவில் திரிஷா பேசும்போது, ‘இந்த மேடையில் இருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. எல்லோருக்கும் இந்த படத்தில் நடிக்க ஆசை இருக்கும். ‘விண்ணைத் தாண்டி வருவாயா’ படத்திற்கு பிறகு சிம்புகூட எப்போ நடிக்கப் போறீங்கனு கேட்டாங்க. இந்த படத்துல அந்த மேஜிக் நடந்திருக்கு. அபிராமியும் நானும் நல்ல ஃபிரெண்ட்ஸ்.

மணி சார் இயக்கத்தில் ஆயுத எழுத்து, பொன்னியில் செல்வன் படத்திற்கு பிறகு ‘தக் லைஃப்’ படத்தில் நடித்திருக்கிறேன். நிறைய ஜாம்பவான்களுடன் நடித்திருப்பது மகிழ்ச்சி’ என்றார்.

பின்னர் கமல்ஹாசனிடம், எம்.பி.ஜான் பிரிட்டாஸ் ஒரு கேள்வியை எழுப்பினார். அதாவது, ‘நீங்க ரொம்ப பாரம்பரியமான பிராமணர் குடும்பத்தை சேர்ந்தவரா இருக்கீங்க. ராமரை வழிபடும் நீங்கள், இரண்டு கல்யாணம்லாம் பண்ணிருக்கீங்க’ என பிரிட்டாஸ் கேட்டார்.

அதற்கு கமல்ஹாசன், ‘நான் வந்து ராமர் குடும்பத்தில் இருந்து வருவதற்கும் கல்யாணத்திற்கும் என்ன சம்பந்தம்? நான் ராமர் இல்லை. அவருடைய அப்பா தசரதன் வழி வந்தவர்கள். இன்னும் 49 ஆயிரம் சொச்சம் பாக்கி இருக்கு’ என பிரிட்டாஸிடம் கமல் தெரிவித்தார்.

இதனை சிம்புவும் திரிஷாவும் பார்த்து வியக்க, அரங்கமே கைத்தட்டலால் அதிர்ந்தது. இந்நிகழ்வு தற்போது வைரலாய் தெறிக்கிறது. இணையவாசிகளும் இதற்கு கமெண்ட்ஸ் தெரிவித்து வருகின்றனர்.

actor kamal haasanmarriagethug life movieசிம்புதிரிஷா