கமலுடன் பதற்றமின்றி நடிக்க, சிம்பு கொடுத்த டிப்ஸ்: அசோக்செல்வன் சுவாரஸ்ய தகவல்

‘தக் லைஃப்’ படத்தில் கமலுடன் இணைந்து நடித்த அசோக்செல்வன் சுவாரஸ்ய நிகழ்வு ஒன்றை பகிர்ந்துள்ளார். அது பற்றிப் பார்ப்போம்..

மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு மற்றும் பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், அசோக் செல்வன் ஆகியோர் இணைந்த ‘தக் லைஃப்’ படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இப்படத்தின் கிளிம்ப்ஸ், போஸ்டர்ஸ், முதல் சிங்கிள் லான்ச் ஆகியவையும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளன.

இந்நிலையில், கமலுடன் முதல் முறையாக அசோக் செல்வனும் நடித்துள்ளார். படப்பிடிப்பில் கமல் போன்ற ஒரு ஜாம்பவானுடன் நடிக்கும்போது, அசோக் செல்வனுக்கு பதற்றமாக இருந்தது அந்த பதற்றத்தை போக்க, சிம்பு ஒரு டிப்ஸ் கொடுத்ததாக அசோக் செல்வன் தெரிவித்துள்ளார்.

அதாவது, கமல் சாருடன் நடிக்க முதலில் பயமாகவும் பதற்றமாகவும் இருந்தது. அப்போது, இது பற்றி சிம்புவிடம் சொன்னேன். அதற்கு சிம்பு ‘கமல் சாருடன் நடிக்கும்போது அவர் கண்ணை மட்டும் பார்த்திடாதே, இன்னும் பயமா இருக்கும். கண்ணை பார்க்காமல் நடி’ என்றார். அதேபோல நடித்து முடித்தேன்’ என கூறியுள்ளார். இதே நிலையில், ‘கமலின் குரலை கேட்டாலே எனக்கு பதற்றமாக இருக்கும்’ என கூறியுள்ளார் ஜோஜு ஜார்ஜ்.

இந்நிலையில் ‘தக் லைஃப்’ படத்தின் புரொமோஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படம், பதற்றமில்லாமல் உற்சாகமாக இருக்கும் எனவும் ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. பார்க்கலாம்.!

actor kamal haasanactor simbuthug life movieஅசோக்செல்வன்கமல்ஹாசன்