ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை கைப்பற்றிய பிரபல சேனல்.. இத்தனை கோடியா.?

ஜனநாயகன்படத்தின் சாட்டிலைட் உரிமையை பிரபல சேனல் கைப்பற்றியுள்ளது.

janayagan movie satellite rights update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் உருவாகி வருகிறது.H.வினோத் இயக்கத்திலும், கே.வி.என் ப்ரோடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.

மேலும் மமீதா பைஜூ ,பூஜா ஹெக்டே, பிரியாமணி , பாபி தியோல் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் பொங்கலை முன்னிட்டு அடுத்த ஆண்டு 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே ஓடிடி உரிமத்தை அமேசான் நிறுவனம் 121 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக தகவல் வெளியான நிலையில் தற்போது சாட்டிலைட் உரிமையை சன் டிவி 55 கோடி கொடுத்து வாங்கியுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

janayagan movie satellite rights update
janayagan moviejanayagan movie satellite rights updatesatellite rightsupdateபாபி தியோல்பிரியாமணிபூஜா ஹெக்டேமமீதா பைஜூஜனநாயகன்