ஜூலையில் வெளியாகிறதா விஜய்யின் ‘ஜனநாயகன்’? தணிக்கை குழு சிக்கல்களுக்கு இடையே புதிய தகவல்!
சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும், நடிகருமான விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியீடு தொடர்பாகப் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. தணிக்கை குழுவின் கெடுபிடிகளால் தள்ளிப்போய்க்கொண்டிருக்கும் இப்படம், வரும் ஜூலை மாதம் திரைக்கு வர வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. தணிக்கை குழு சர்ச்சை: இப்படத்தில் மத நல்லிணக்கத்திற்கு ஊறு விளைவிக்கும் காட்சிகள் இருப்பதாகக் கூறி, மத்திய தணிக்கை வாரியம் மறு ஆய்வுக்கு உத்தரவிட்டது. இதை எதிர்த்து படக்குழு நீதிமன்றம் சென்றது. பல்வேறு சட்டப் போராட்டங்களுக்குப் பிறகு, மார்ச் […]