போஸ்டருடன் பூஜா ஹெக்டேவிக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ள ஜனநாயகன் படக்குழு.!!

பூஜா ஹெக்டேவின் பிறந்தநாளுக்கு போஸ்டர் உடன் படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.


jananayagan team wishes for pooja hegde

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது கடைசி படமான ஜனநாயகன்படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் பூஜா ஹெக்டே இந்த படத்தில் பாபி தியோல் ,பிரகாஷ்ராஜ், மமீதா பைஜூ, பிரியாமணி போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர் எச் வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக அதிகரித்து உள்ளது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் கதாநாயகியான பூஜா ஹெக்டே பிறந்த நாள் என்பதால் அவரது புகைப்படத்துடன் இருக்கும் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அதில் ஹாப்பி பர்த்டே கயல் என்று பதிவிட்டு உள்ளனர்.

பூஜா ஹெக்டே இந்த படத்தில் கயல் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருவது தெரியவந்துள்ளது. இது ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் இருந்தது என்றே சொல்லலாம். ரசிகர்கள் பிரபலங்கள் என பலரும் இவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

jananayaganjananayagan team wishes for pooja hegdePooja Hegdeteamwishesபாபி தியோல்பிரகாஷ்ராஜ்பிரியாமணிமமீதா பைஜூ