ஜனநாயகன் ரிலீஸ் இந்த ஆண்டு இல்லையா? அப்செட்டில் ரசிகர்கள்..!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் இந்த ஆண்டு இல்லை என்ற தகவல் வெளியாக்கியுள்ளது.


jananayagan movie release update

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் கோட் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

அதனைத் தொடர்ந்து H வினோத் இயக்கத்தில் ஜனநாயகன் என்ற படத்தில் நடித்து வருகிறார். கே.வி.என் ப்ரொடக்ஷன் தயாரிக்கும் இந்த படத்தில் பூஜா ஹெக்டே, பாபிதியோல், மமீதா பைஜூ, கௌதம் மேனன் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

இது தளபதி விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது என்றே சொல்லலாம். அந்த வகையில் மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அடுத்த வருடம் பொங்கலுக்கு தான் வெளியாகும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

இதனால் ரசிகர்கள் அப்செட் ஆகி உள்ளனர்.


jananayagan movie release update
H வினோத்jananayagan moviejananayagan movie release updaterelease updateகௌதம் மேனன்பாபிதியோல்பூஜா ஹெக்டேமமீதா பைஜூஜனநாயகன்