ஜனநாயகன் படம் குறித்து வெளியான சூப்பர் தகவல்.. எதிர்பார்ப்பில் காத்திருந்த ரசிகர்களுக்கு ஒரு குட் நியூஸ்..!

ஜனநாயகன் படம் குறித்து சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது.

jananayagan movie release latest update viral

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய்.இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை முன்னிட்டு வெளியாக இருந்தது. சென்சார் பிரச்சனை காரணமாக இந்த திரைப்படம் ரிலீஸ் ஆகாமல் தற்போது வரை இருந்து வருகிறது.

எச் வினோத் இயக்கத்திலும் கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவான இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார். இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

கோடைகால விடுமுறையில் இந்த திரைப்படம் வெளியாகும் என ரசிகர்கள் மிகவும் எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில் தற்போது இந்த திரைப்படம் குறித்த சூப்பர் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது அதாவது இந்த படத்தை ரிவைஸிங் கமிட்டி நாளை பார்க்கப் போவதாகவும் செயல்முறை வெற்றிகரமாக நடந்தால் இன்னும் இரண்டு வாரங்களில் சென்சார் சான்றிதழ் வழங்கப்படும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே காரா திரைப்படம் ஏப்ரல் 30ஆம் தேதியும் கருப்பு திரைப்படம் மே 15ஆம் தேதியும் வெளியிட திட்டமிட்டிருக்கும் நிலையில் தேர்தலுக்குப் பிறகு இந்த திரைப்படம் எந்த தேதியில் வெளியாகும் என்று ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது.

ஜனநாயகன் படத்தில் இருந்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது மிகப்பெரிய சர்ப்ரைஸாக இருக்கும். இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

jananayagan movie release latest update viral
jananayagan moviejananayagan movie release latest update viralLatest updatereleaseviralஅனிருத்கே வி என் ப்ரொடக்ஷன்தளபதி விஜய்ஜனநாயகன்