தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், நடிகர் ஜெய் கதையின் நாயகனாக நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் பாரம்பரிய முறைப்படி பூஜையுடன் தொடங்கியுள்ளது.
‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ எனத் தற்காலிகமாகப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்குகிறார். ஹாரர் காமெடி ஜானரில் உருவாகும் இப்படத்தில், ஜெய்க்கு ஜோடியாக நடிகை டெல்னா டேவிஸ் நடிக்கிறார். தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ.எம். பிரபாகரன் இப்படத்தைத் தயாரிக்கிறார்.
இப்படத்தின் தொடக்க விழா தென்காசியில் நடைபெற்றது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங், ஐஏஎஸ், சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு கேமராவை இயக்கி வைத்தார். தொழிலதிபர் எஸ். சாமிநாத பாண்டியன் முன்னிலையில், தயாரிப்பாளர் ஏ.எம். பிரபாகரன் கிளாப் அடித்துப் படப்பிடிப்பைத் தொடங்கி வைத்தார்.
- Advertisement -
இப்படத்திற்கு விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்கிறார். ஜெயச்சந்திரன் கலை இயக்கத்தையும், வி.ஜே. சபு ஜோசப் படத்தொகுப்புப் பணிகளையும் மேற்கொள்கின்றனர்.
தென்காசியில் தொடங்கியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து 23 நாட்கள் நடைபெறவுள்ளதாகப் படக்குழு தெரிவித்துள்ளது.
நடிகர் ஜெய், அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா மற்றும் தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் இணைந்துள்ள இந்தப் புதிய ஹாரர் காமெடி திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் உருவாகியுள்ளது.