‘ஜெயிலர்-2’ படத்தில் நடிக்கிறீர்களா?: சந்தானம் குதர்க்கமான பதில்..

சந்தானம் நடிப்பில் கடைசியாக ‘டிடி நெக்ஸ்ட் லெவல்’ என்ற படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. இதனையடுத்து கிரைம் திரில்லர் கதையம்சத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிக்கவுள்ளார். இதற்காக நாவலாசியர் ராஜேஷ் குமாரை சந்தித்து படக்குழுவினர் கதை விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இந்நிலையில் ரஜினியின் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிப்பதாக வெளியான தகவல் குறித்து சந்தானம் தெரிவிக்கையில், ‘அதென்ன கள்ளக்காதலா, மறைத்து விட்டு செய்வதற்கு. எதுவாக இருந்தாலும் உங்களிடம் சொல்லி விட்டுத்தான் செய்வேன்’ என நகைச்சுவையாக பதிலளித்துள்ளார்.

அவர் அளித்துள்ள இந்த பதிலால் ரசிகர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அப்போது ‘ஜெயிலர் 2’ படத்தில் சந்தானம் காமெடி ரோலில் நடிக்கவில்லையா என கேள்வி எழுப்பி வருகின்றனர்.

நெல்சன் இயக்கிய ‘ஜெயிலர்’ பட முதல் பாகத்தில் நடித்த ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, மிர்னா ஆகியோருடன் எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு, வித்யா பாலன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இவர்களுடன் மோகன்லால், சிவராஜ்குமார் மற்றும் விஜய் சேதுபதி ஆகிய பிரபலங்கள் கெஸ்ட் ரோலிலும் ‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கிறார்கள். அனிருத் தற்போது இரண்டாம் பாகத்துக்கும் இசையமைக்கிறார். அடுத்தாண்டு கோடைவிடுமுறையில் இப்படம் வெளியாகிறது.

இதனிடையில் ரஜினியின் அடுத்த படமான ‘தலைவர் 173’ குறித்தான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பில் உள்ளனர். பொறுத்திருந்து பார்ப்போம்.

jailer2 movie act in santhanam
actor santhanamjailer2 movieRajinikanthஎஸ்.ஜே. சூர்யாரஜினி