ஜெயிலர் 2 படத்தில் பிரபல முன்னணி நடிகர் இணைந்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது நடிப்பில் ஜெயிலர் என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றது மட்டுமில்லாமல் அமோக வசூலையும் பெற்றுள்ளது.
மேலும் சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன் , விநாயகன் மோகன்லால் போன்ற பல பிரபலங்கள் இந்த படத்தில் நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது நெல்சன் இயக்கத்தில் உருவாகியிருந்த இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இந்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. அதாவது தெலுங்கு நடிகரான பாலையா இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது.
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. ஏற்கனவே முதல் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்ற நிலையில் தற்போது இரண்டாம் பாகத்தின் ரிலீஸ்காக எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர்.