சூர்யா அரசியலில் வருகை தர இருப்பதாக தகவல் வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் ரெட்ரோ என்ற திரைப்படம் வெளியாகி கலையான விமர்சனங்களை பெற்றது அதனை தொடர்ந்து ஆர்.ஜே பாலாஜி இயக்கத்தில் கருப்பு என்ற படத்தில் நடித்துள்ளார்.
இந்த படத்தை தொடர்ந்து வெடிக்கையான இயக்கத்தில் சூர்யா 46 என்ற படத்தில் நடிக்க உள்ளார்.தொடர்ந்து படங்களில் பிஸியாக நடித்து வரும் இவர் தற்போது விஜய் தொடர்ந்து அரசியல் ஈடுபட உள்ளதாக தகவல்கள் சில பரவி வருகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக சூர்யாவின் தலைமை நற்பணி இயக்கம் விளக்கம் கொடுத்து பதிவு வெளியிட்டுள்ளனர்.அதாவது வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் சூர்யா களமிறங்கப் போகிறார் என்ற செய்தி பொய்யென சொல்லி உள்ளனர்.
மேலும் சினிமா மற்றும் அகரம் சூர்யாவிற்கு இப்போதைய போதுமான நிறைவை தந்துள்ளது என்றும் கூறியுள்ளனர்.
எங்கள் அண்ணன் சூர்யா அவர்கள் பற்றி வெளியான போலியான இந்த செய்தியை திட்டவட்டமாக மறுக்கிறோம் என்றும் கூறியுள்ளார். இதனால் சூர்யா அரசியலுக்கு வரப்போகிறார் என்ற தகவல் முற்றிலும் பொய்யானது என தெரியவந்துள்ளது.