பஹல்காம் தாக்குதல் : இந்தியாவின் பதில் தாக்குதலுக்கு குவியும் வாழ்த்து..!

பாகிஸ்தான் மீது இந்தியா பதில் தாக்குதல் நடத்தியுள்ளது.

India retaliated with Operation Sindoor

கடந்த வாரம் பஹல்காம் பகுதியில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் மிகவும் கொடுமையானது. அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய பாதுகாப்பு படைகள் “ஆப்ரேஷன் சிந்தூர்”என்ற பெயரில் பாகிஸ்தானின் முக்கிய ஆக்கிரமிப்பு பகுதியில் உள்ள மூர்த்தி கோர்ட்லி பாபர் போன்ற இடங்களை குறி வைத்து தாக்குதல் நடத்தியுள்ளது.

தற்போது இந்த தாக்குதல் குறித்து பிரபலங்கள் அவர்களது வாழ்த்துக்களையும் கருத்துக்களையும் தெரிவித்துள்ளனர்.

நடிகர் சூர்யா தனது ட்விட்டர் பக்கத்தில், “நமது வீரர்களின் துணிச்சலுக்கு தலைவணங்குகிறேன். ஜெய் ஹிந்த்!” என்று குறிப்பிட்டுள்ளார்.

இயக்குனர் வெற்றிமாறன், “பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் இந்த உறுதியான நடவடிக்கை பாராட்டத்தக்கது. தேசத்தின் பாதுகாப்பே முதன்மையானது” என்று தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

நடிகை சாய் பல்லவி, “பாதுகாப்புப் படைகளின் இந்த துணிச்சலான பதிலடி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதல் அளிக்கும். நாம் அனைவரும் அவர்களுடன் துணை நிற்போம்” என்று உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தனது ட்விட்டரில், “ஆபரேஷன் சிந்தூர் ஒரு சரியான பதிலடி. நமது ராணுவத்திற்கு எனது மனமார்ந்த ஆதரவு” என்று கூறியுள்ளார்.

indiaIndia retaliated with Operation SindoorOperation Sindoorretaliatedwithகோட்லிசாய் பல்லவிமுர்திமுஷாபர்பாத்