‘தல’ அஜித் நடிப்பில் ‘குட் பேட் அக்லி’ இயக்கி தெறிக்க விட்ட இயக்குநர் ஆதிக் என்பது தெரிந்ததே.
இந்நிலையில், இப்படத்துக்கு் எதிராக இசைஞானி இளையராஜா வழக்கு தொடர்ந்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் அஜித் நடிப்பில் வெளியான ‘குட் பேட் அக்லி’ படத்தில் விண்டேஜ் பாடல்கள் இடம்பெற்று இருந்தன. இளையராஜாவின் என் ஜோடி மஞ்ச குருவி, ஒத்த ரூபாய் தாரேன், இளமை இதோ இதோ போன்ற பாடல்கள் ‘குட் பேட் அக்லி’ படத்தில் இடம்பெற்று இருந்தது. இந்த பாடல்கள் அனைத்தும் அனுமதியின்றி பயன்படுத்தி இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.
அத்துடன் குட் பேட் அக்லி தயாரிப்பு நிறுவனத்துக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதில், தனது பாடல்களை பயன்படுத்தியதற்காக ராயல்டி தொகை வழங்க வேண்டும். அல்லது பாடல்களை நீக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது. அத்துடன் அனுமதியின்றி பாடல்களை பயபடுத்திஎதற்காக ரூ. 5 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் நோட்டீஸ் அனுப்பட்டது.
மேலும், பாடல்களை 7 நாட்களுக்குள் நீக்காமல் போனால், சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தில் இளையராஜா தரப்பில் இருந்து மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், ரூ. 5 கோடி இழப்பீடு கோரி அனுப்பிய நோட்டீஸுக்கு தயாரிப்பு நிறுவனம் சட்டப்பூர்வமான உரிமையாளர்களிடம் இருந்து பாடல்களை பயன்படுத்த அனுமதி பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளது.
ஆனால், அந்த உரிமையாளர் யார் என்பது குறித்து எந்த தகவலும் இல்லை. பதிப்புரிமை சட்டத்துக்கு விரோதமாக பாடல்களை பயன்படுத்தியுள்ளனர். சட்ட விரோதமாக பயன்படுத்தியதற்காக உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்த மனு மீதான விசாரணை 8 ஆம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது. கடந்த ஏப்ரல் 10-ந்தேதி திரையரங்குகளில் ரிலீசானது ‘குட் பேட் அக்லி’. இப்படத்தில் அஜித்துடன் திரிஷா, கெஸ்ட்ரோலில் சிம்ரன், அர்ஜுன் தாஸ், பிரபு, சுனில், பிரசன்னா, பிரியா வாரியர், ஷைன் டாம் சாக்கோ, ராகுல் தேவ் உள்பட பலரும் நடித்திருந்தனர்.
இச்சூழலில், கோர்ட்டில் ஆஜரானார் இளையராஜா. அஜித்தின் ஸ்டைலிஷ் லுக்குகள், அவருடைய வெற்றி பெற்ற பழைய படங்களின் ரெபரன்ஸ்கள், விண்டேஜ் பாடல்கள் ஆகியவை இடம்பெற்றிருந்தன. இதனால் திரையரங்குகளில் ‘குட் பேட் அக்லி’ படத்தின் ஒவ்வொரு சீன்களையும் ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். இப்படத்துக்கு கிடைத்த பிரம்மாண்ட வரவேற்பினை தொடர்ந்து மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரன், அஜித் இணைய வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்தனர்.
அதே போல் ஏகே 64 படத்தில் இந்த காம்போ இணைந்துள்ளது. இருவரும் இரண்டாவது முறையாக கூட்டணி அமைக்கவுள்ளது கிட்டத்தட்ட கன்பார்ம் ஆகியுள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்காக ரசிகர்கள் காத்திருப்பில் உள்ளனர். ஏகே தற்போது கார் பந்தயத்தில் பிஸியாக இருக்கிறார். இந்த போட்டியெல்லாம் முடிந்ததும் தனது அடுத்த கட்டம் சிறப்புடன் தெறிக்கவிடுவார்.