நடிகை சைத்ரா ஆச்சார் நடிக்கும் ‘418’ அக்டோபர் 23-ல் ரிலீஸ்!

இயக்குநர் பிரசாந்த் நீல் வழங்க, மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள திகில் மற்றும் மர்மம் நிறைந்த திரைப்படம் ‘418’. கீர்த்தன் நடாகௌடா இயக்கியுள்ள இப்படம், வரும் அக்டோபர் 23-ம் தேதி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில் ரவி சங்கர் யலமஞ்சிலி மற்றும் நவீன் யெர்னேனி ஆகியோர் இப்படத்தைத் தயாரித்துள்ளனர். இப்படத்தில் சைத்ரா ஆச்சார், சரண் லக்கராஜு, சூர்ய ராஜ் வீரபதினி, ப்ரீத்தி பகடாலா, சஷாங்க் பாட்டீல் மற்றும் ஸ்ரீ வைஷ்ணவ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பல்வேறு கதைக்களங்களில் திரைப்படங்களைத் தயாரித்து வரும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம், தமிழ் ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற படைப்புகளைத் தொடர்ந்து வழங்கி வருகிறது. அந்த வகையில், சஸ்பென்ஸ், மர்மம் மற்றும் திகில் அம்சங்களை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘418’ திரைப்படம் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டிருக்கும் மருத்துவக் கல்லூரி விடுதியை மையமாகக் கொண்டு இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, அந்த விடுதியில் உள்ள 418-வது அறையைச் சுற்றி நிலவும் மர்மங்களும், அங்கு நிகழும் விளக்க முடியாத சம்பவங்களும் கதையின் முக்கிய அம்சங்களாக இடம்பெற்றுள்ளன.

அறிவியல், மூடநம்பிக்கை மற்றும் அமானுஷ்ய நிகழ்வுகளுக்கு இடையிலான மர்ம முடிச்சுகளை அவிழ்க்கும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. திகிலூட்டும் காட்சிகள், பரபரப்பான திருப்பங்கள் மற்றும் இறுதிவரை யூகிக்க முடியாத மர்மம் என ரசிகர்களுக்கு வித்தியாசமான திரையரங்க அனுபவத்தை வழங்க இப்படம் தயாராகியுள்ளது.

418-வது அறை ஏன் 15 ஆண்டுகளாகப் பூட்டப்பட்டுள்ளது? அந்த அறைக்குள் உண்மையில் என்ன நடந்தது? அதன் ரகசியங்களை வெளிக்கொண்டு வர முயற்சிப்பவர்களுக்கு என்ன காத்திருக்கிறது? என்ற கேள்விகளுக்கான பதில்களைத் திரைப்படம் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பிரசாந்த் நீல் வழங்கும் இந்த ஹாரர் மிஸ்ட்ரி திரைப்படம் அக்டோபர் 23-ம் தேதி நான்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகிறது.

418Actress Chaithra Achar’s ‘418’ to Release on October 23Chaithra Achar