ஆஸ்கரை நோக்கி இசைஞானி இளையராஜா!

கலைவளரி சக இரமணதாஸ் மற்றும் சுகந்தினி இரமணதாஸ் தயாரிப்பில், கயல் வின்சன்ட், TJ. பானு, சுதர்சன் ரவீந்திரன், செளமி முனசிங்க, நிழல்கள் ரவி, அருள்தாஸ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவான திரைப்படம் ‘அந்தோனி’.

சுகிர்தன் கிறிஸ்துராஜா மற்றும் ஜெனோசன் ராஜேஸ்வர் இயக்கத்தில் மூன்று மொழிகளில் உருவான இப்படம், சமீபத்தில் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது.

திரையரங்கு வெளியீட்டைத் தொடர்ந்து இந்தியாவில் அமேசான் பிரைம் வீடியோ, OTT Plus, Shortflix, Tentkotta, Roopahala உள்ளிட்ட பல்வேறு OTT தளங்களிலும் ‘அந்தோனி’ திரைப்படம் வெளியாகியுள்ளது.

- Advertisement -

இந்நிலையில், 2027ஆம் ஆண்டுக்கான சிறந்த சர்வதேச திரைப்படப் பிரிவில் ஆஸ்கர் விருது விழாவுக்கான தேர்வுக்குழுவின் பரிசீலனைக்காக ‘அந்தோனி’ திரைப்படம் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தால் அனுப்பப்பட்டுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.

மேலும், ‘The Maestro’ என அழைக்கப்படும் இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ள இப்படம், அவரது இசையில் உருவான முதல் இலங்கை தமிழ் திரைப்படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

‘அந்தோனி’ திரைப்படம் ஆஸ்கர் தேர்வுக்குழுவுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், சர்வதேச அளவில் இப்படத்திற்கு மேலும் அங்கீகாரம் கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

AnthonyIlaiyaraajaIlaiyaraaja Heads to the Oscars