நிச்சயதார்த்தத்திற்கு பிறகு விஷால் முடிவு ஒன்று எடுத்துள்ளார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால்.இவரது நடிப்பில் மதகஜராஜா என்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பையும் அமோக வசூல் வேட்டையையும் நடத்தி இருந்தது.
நேற்று இவருடைய பிறந்த நாளை முன்னிட்டு இவருக்கும் நடிகை தன்ஷிகாவுக்கும் நிச்சயதார்த்தம் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது இந்த நிலையில் நிச்சயதார்த்தத்திற்கு பிறகு சில அதிர்ச்சியான முடிவுகளை விஷால் எடுத்துள்ளார்.
அதாவது முதலில் அவர் அவருடைய அவருக்கு வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி சொல்லிவிட்டு இன்னும் இரண்டு மாதங்களில் நடிகர் சங்க கட்டிடம் திறப்பு விழா கோலாகலமாக நடக்க இருப்பதாகவும் கட்டடம் திறந்ததும் எங்களை திருமணம் நடக்கும் எனவும் பேசியுள்ளார். மேலும் பேச்சுலர் வாழ்க்கை நிறைவு பெற்று என்னுடைய வாழ்க்கையில் நிறைய மாற்றங்கள் வர இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இது மட்டும் இல்லாமல் காதல் படத்தில் நடிப்பேன் ஆனால் முத்த காட்சிகளில் நடிக்க மாட்டேன் என பேசியுள்ளார். இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.