பாலா பற்றி கூல் சுரேஷ் பேசியுள்ளார்.
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் பாலா. அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் தனது நகைச்சுவையான பேச்சின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ளார்.
இது மட்டுமில்லாமல் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து பல மக்களின் வாழ்க்கை தரத்தை மாற்றி உள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் காந்தி கண்ணாடி என்று திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று வந்தது.
இந்த நிலையில் பாலா குறித்து கூல் சுரேஷ் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதாவது இந்த பாலாவுக்கு அவ்வளவு பணம் எங்கிருந்து வருது என்றும் பார்க்கிறவர்களுக்கெல்லாம் உதவி செய்யும் அளவுக்கு இலவச மருத்துவமனை கற்ற அளவுக்கு அவ்வளவு பணம் இருக்கா அவன் ஒன்னும் ராஜ பரம்பரையோ இல்லை ஜமீன்தார் வீட்டு பையனோ கிடையாது அவன் பின்னால் யாரோ இருக்காங்க அதை பற்றி விசாரிங்க என்று கூறியுள்ளார்.
இவரின் இந்த பேச்சு இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.