முதல்வர் ஆகிவிட்டாரா தளபதி விஜய்? போஸ்டர் இதோ.!!

தளபதி விஜய் முதல்வர் ஆகிவிட்டதாக போஸ்டர் ஒன்று வெளியாகி உள்ளது.

Has Thalapathy Vijay become the Chief Minister Here is the poster.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் வெளியாக உள்ளது.H. வினோத் இயக்கத்திலும், கே வி என் ப்ரொடக்ஷன் தயாரிப்பிலும் உருவாகியுள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

பொங்கலை முன்னிட்டு இந்த திரைப்படம் வெளியாக உள்ளது. இது விஜயின் கடைசி படம் என்பதால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு எக்கச்சக்கமாக இருந்து வருகிறது. இந்த படம் முடிந்த கையோடு விஜய் முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்பது அனைவரும் அறிந்ததே.

அந்த வகையில் தற்போது விஜய் முதல்வர் ஆகிவிட்டது போல போஸ்டர் ஒன்று இணையத்தில் வெளியாகி வருகிறது. அதாவது நடிகர் அப்பு குட்டி நடிப்பில் வெளியாக உள்ள திரைப்படம் யாதும் அறியான் இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி இருந்த நிலையில் அந்த ட்ரெய்லரில் ஒரு காட்சியில் உள்ள போஸ்டரில் 2026 இல் விஜய் முதல்வர் ஆகிவிட்டார் என்பது போல இருக்கிறது.

இந்த போஸ்டர் இணையத்தில் வெளியாகி தீயாகப் பரவி வருகிறது.

Has Thalapathy Vijay become the Chief Minister Here is the poster.!!
2026Chief MinisterHas Thalapathy Vijay become the Chief Minister? Here is the poster.!!jananayaganPoliticalTamil NaduThalapathy Vijayதளபதி விஜய்முதல்வர்ஜனநாயகன்