‘ஜனநாயகன்’ படத்தில் பாடிய அரசியல் பாடல் பற்றி, பாடகர் பெருமிதம்..

‘ஜனநாயகன்’ படத்தில் பாடல் பாடிய பாடகர் பற்றிய தகவல்கள் காண்போம்..

அரசியல் பேசும் படமாக உருவாகி வரும் ‘ஜனநாயகன்’ படம் விஜய்யின் அரசியல் களத்திற்கு உதவும் வகையில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது.

காட்சிகள் மட்டும் இல்லாமல் பாடல்களும் அரசியல் முழக்கமாக இருக்கும் வகையில் உருவாக்க படக்குழு முடிவெடுத்துள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதற்காக, அனிருத் மிகவும் தீவிரமாக செயல்பட்டு வருகிறார். மேலும் விஜய்யின் கடைசிப் படம் என்பதால், அவருக்கு தனது ஸ்டைலில் செம ஹிட் கொடுக்க வேண்டும் என, தனி டிராக் ஒன்றை உருவாக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இப்படத்தில் புகழ்பெற்ற ராப் பாடகர் அனுமன் கைண்ட் ஒரு பாடல் பாடியுள்ளார். இதனை அவரே ஒரு நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார்.

அனுமன் கைண்ட் அடிப்படையில் கேரளாவைச் சேர்ந்தவர். கேரளாவில் விஜய்க்கு லட்சக்கணக்கில் ரசிகர்கள் உள்ளார்கள். அனுமன் கைண்ட் அவரது ‘பிக் டாக்’ என்ற பாடல் மூலம் உலகப் புகழ் பெற்றவர். ‘ஜனநாயகன்’ படத்தில் பாடல் பாடியது பற்றித் தெரிவிக்கையில்,

‘ஜனநாயகன் படத்தில் ஒரு பாடல் பாடியிருக்கிறேன். அந்த பாடல் பெரிய அளவில் பேசப்படும் என நம்புகிறேன். மேலும், இன்னும் பல படங்களுக்கு பாடுகிறேன். அதனால், இனி சென்னைக்கு அடிக்கடி வர வேண்டியிருக்கும்’ என்றார்.

இவரது உலகப் புகழ்பெற்ற பிக் டாக் ராப் பாடலானது, கேரளாவில் இருக்கும் தற்காப்புக் கலையான களரியை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டது. இந்த பாடலை வீடியோவாக பதிவு செய்ய, நிஜ மரணக் கிணற்றை உருவாக்கி ஸ்டண்ட் கலைஞர்களை கொண்டு அந்த வீடியோவை உருவாக்கினர். இந்த பாடலுக்கு சர்வதேச அளவில் அங்கீகாரம் கிடைத்தது குறிப்பிடத்தக்கது. ‘ஜனநாயகன்’ படத்தில் அனுமன் கைண்ட் பாடிய ராப் பாடல் வரிகள் அரசியல் பாடலாக இருக்கும் என ரசிகர்கள் கணித்து வருகிறார்கள்.

hanuman kind song on vijay in jana nayagan movie
actor vijayjananayagan moviesinger hanuman kindஅனிருத்ஜனநாயகன்