குட் பேட் அட்லி படத்தின் செகண்ட் சிங்கிள் வெளியாகியுள்ளது.
good bad ugly movie second single video viral
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் விடா முயற்சி என்ற திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது.
அதனைத் தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி என்ற திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார் மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
அஜித்திற்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ள இந்த திரைப்படம் அடுத்த மாதம் 10ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது.
தற்போது செகண்ட் சிங்கிளை படக்குழு வெளியிட்டு உள்ளது. இந்தப் பாடல் ஜிவி பிரகாஷ் இசையில் அனிருத் பாடியுள்ளார். அஜித்தின் மிரட்டல் ஆன நடனம் ரசிகர்களை கவர்ந்து வருகிறது.
இந்த வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனைப் பார்த்த ரசிகர்கள் பாடல் வரிகளையும் அஜித்தின் நடனத்தையும் கண்டு கொண்டாடி வருகின்றனர்.