விருது வருது: இன்று’அங்கம்மாள்’ கீதா கைலாசம்; நாளை ‘தாய் கிழவி’ ராதிகா..

நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள ‘தாய் கிழவி’ படம் வருகிற 27-ந்தேதி வெளியாகிறது. இப்படத்தில் நடித்துள்ள ராதிகாவுக்கு சிறந்த நடிகைக்கான விருது கிடைக்கும் என திரைப் பிரபலங்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், இயக்குநர் கே.பாலசந்தரின் மருமகளும், நடிகையுமான கீதா கைலாசம் நடிப்பில், சமீபத்தில் ‘அங்கம்மாள்’ படம் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. இந்த படத்தில் ஜாக்கெட் அணியாத கிராமத்து மூதாட்டி கதாபாத்திரத்தில் கீதா கைலாசம் அசத்தியிருந்தார். அவருக்கு சிறந்த நடிகைக்கான ‘காய்ப்’ சினிமா விருது வழங்கப்பட்டு உள்ளது. இதனை வினோத் ஜெயராமன் வழங்கினார்.

மேலும் ‘அங்கம்மாள்’ படத்துக்கு சிறந்த கதைக்கான விருதும் கிடைத்தது. சிறந்த நடிகர் விருது ‘நாங்கள்’ படத்தில் நடித்த அப்துல் ரபேவுக்கு கிடைத்தது. இதுகுறித்து கீதா கைலாசம் கூறும்போது,

‘திரைப் பிரபலங்களுக்கு விருதுகளும், ரசிகர்களின் பாராட்டுகளும் மிகப்பெரிய சந்தோஷத்தை தரும். கலைஞர்களுக்கு விருதுகளே அடையாளம். அது இன்னும் நம்மை முன்னோக்கி செல்ல உந்தப்படும் சக்தியாக திகழ்கிறது’ என கூறியுள்ளார்.

ரெட்ரோ, பைசன், காந்தா, நாங்கள், பேட் கேர்ள், காதல் என்பது பொதுவுடைமை, டூரிஸ்ட் பேமிலி, வீர தீர சூரன் படங்களும் விருது பட்டியலில் இடம்பெற்றன.

geetha kailasam act angammal movie award

 

awardsGeetha Kailasamthai kizhavi movieகீதா கைலாசம்ராதிகா