நடிகர் ரவிமோகனை தொடர்ந்து, நடிகர் கௌதம் கார்த்திக் பெயர் மாற்றம்

கதை மாற்றமும் முக்கியம். பெயர் மாற்றமும் முக்கியம் என முடிவெடுத்துள்ளார் கௌதம் கார்த்திக். இது பற்றிய விவரம் காண்போம்..

மணிரத்னம் இயக்கத்தில், கெளதம் கார்த்திக் ‘கடல்’ திரைப்படம் மூலம் அறிமுகமானார். முதல் படமே தோல்வி அடைந்ததால், அவருக்கு வெற்றி என்பது தாமதமாவது தொடர்கிறது.

இந்நிலையில், ‘தேவராட்டம்’ படத்தில் நடித்தபோது நடிகை மஞ்சிமா மோகனை காதலித்தார். அவரை கடந்த 2022-ம் ஆண்டு பெற்றோர் சம்மதத்துடன் திருமணம் செய்துகொண்டார்.

பொதுவாக, சினிமாவில் திருப்புமுனை ஏற்படுவதற்காக நடிகர்கள் பெயரை மாற்றுவதுண்டு. அண்மையில் நடிகர் ஜெயம் ரவி தன் பெயரை ரவி மோகன் என மாற்றிக்கொண்டார். அவ்வகையில், கெளதம் கார்த்திக் தன் பெயரை “கெளதம் ராம் கார்த்திக்” என மாற்றியிருக்கிறார்.

இன்று வெளியாகியுள்ள ‘மிஸ்டர் எக்ஸ்’ பட போஸ்டர் மூலம் அவர் பெயர் மாற்றியுள்ள தகவல் உறுதியாகி இருக்கிறது.

அதில், அவரது பெயரை கெளதம் ராம் கார்த்திக் என்று குறிப்பிட்டுள்ளனர். ‘மிஸ்டர் எக்ஸ்’ படத்தில் ஆர்யா, மஞ்சு வாரியர் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தை ‘எஃப் ஐ ஆர்’ படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் இயக்கியுள்ளார்.

வெற்றி என்பது தேர்ந்தெடுக்கும் கதையில் இருக்கிறதோ இல்லையோ, ஆனால் பெயரிலும் இருக்கிறது என்பது மாறாத சென்ட்மென்டுதான்.

actor gautham karthikactor ravimohandirector mani ratnamகெளதம் ராம் கார்த்திக்மணிரத்னம்