அஜித்தின் AK64 மற்றும் விஜய்யின் ‘ஜனநாயகன்’ படம் அப்டேட்ஸ்..

அஜித்-விஜய் படங்களின் தகவல்கள் பற்றிப் பார்ப்போம்..

‘குட் பேட் அக்லி’ ரிலீசுக்கு பிறகு ‘தல’ அஜித் வெளிநாடுகளில் நடந்து வரும் கார் பந்தயங்களில் பிஸியாக இருந்து வருவதன் காரணமாக AK64 படத்தின் அறிவிப்பு வர தாமதமாவதாக கூறப்படுகின்றது. இப்படத்தின் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் என்பது உறுதியானாலும் தயாரிப்பாளர் யார் என்பது உறுதியாகவில்லை.

இந்நிலையில், தற்போது படத்தின் தயாரிப்பாளரும் முடிவாகி விட்டதாகவும், அக்டோபர் அல்லது நவம்பர் மாதம் முதல் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் சொல்லப்படுகிறது.

அதற்கு முன்னதாக இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட உள்ளதாகவும் தெரிகிறது. அநேகமாக அக்டோபர் முதல் வாரத்தில் இப்படத்தின் அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், ​விஜய்-ஹெச்.வினோத் இணைந்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் டப்பிங் பணிகளை ஹெச்.வினோத் தற்போது கவனித்து வருகிறார். அடுத்தாண்டு ஜனவரி மாதம் ‘ஜனநாயகன்’ ரிலீஸ் என்றாலும் அதற்குள் பெரும்பாலான பட வேலைகளை வினோத் முடித்து விட்டதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கிறது.

‘ஜனநாயகன்’ படம் குறித்து ஹெச்.வினோத் தெரிவிக்கையில், ‘திரைப்படம் சிறப்பாக வந்திருக்கிறது. அனைவருக்கும் பிடித்த படமாக இருக்கும். பக்காவான ஒரு கமர்ஷியல் படம்’ என உறுதியளித்தார்.

இந்நிலையில், இப்படத்தின் முதல் சிங்கிள், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியாக வாய்ப்புகள் உள்ளதாக ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.!

​from jananayagan single to ak64 announcement
Actor AjithKumaractor vijayjananayagan movieஅஜித்விஜய்