சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படத்தின் இயக்குனர் யார் தெரியுமா?

சிவகார்த்திகேயன் நடிக்கப் போகும் புதிய படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

Do you know who is the director of Sivakarthikeyan’s new film

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகியிருந்தது. இந்தப் படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்தப் படத்தை தொடர்ந்து சுதா கொங்காரா இயக்கத்தில் பராசக்தி என்ற படத்தில் நடித்துள்ளார்.இந்த நிலையில் அடுத்ததாக சிவகார்த்திகேயன் யாரு இயக்கத்தில் நடிக்கப் போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது ஏற்கனவே சிவகார்த்திகேயனை வைத்து டான் படத்தை இயக்கிய சிபிச் சக்கரவர்த்தி தான் சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை இயக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது அதனை தொடர்ந்து வெங்கட் பிரபு கூட்டணியில் சிவகார்த்திகேயன் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.

இந்த தகவல் இணையத்தில் வெளியாகிய ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.இது மட்டுமில்லாமல் அடுத்தடுத்த சிவகார்த்திகேயனின் படங்கள் வெளியாகும் என்பதால் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Do you know who is the director of Sivakarthikeyan’s new film
directorDo you know who is the director of Sivakarthikeyan's new film?Latest newsnew filmSivakarthikeyanTamil cinemaupadteசிவகார்த்திகேயன்சுதா கொங்காராபராசக்திமதராசிவெங்கட் பிரபு