ரெட்ரோ படத்தின் ப்ரீ புக்கிங் வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் கங்குவா என்ற திரைப்படம் வெளியாகி இருந்தது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகியிருந்த இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பை தராமல் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
அதனைத் தொடர்ந்து சூர்யா கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ என்ற படத்தில் நடித்த முடித்துள்ளார். இந்த திரைப்படம் மே ஒன்றாம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்தப் படத்தில் சூர்யாவுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடித்திருக்கும் நிலையில் மேலும் ஜெயராம், நாசர் ,பிரகாஷ்ராஜ் ,நந்திதா தாஸ் போன்ற பல பிரபலங்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் இந்த இந்தப் படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கி இருக்கும் நிலையில் தற்போது 15 லட்சம் வசூல் செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது
இந்த தகவல் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.