தளபதி விஜய்யின் தவெக மாநாடு குறித்து, அவரது தந்தை எஸ்ஏசி கூறிய கருத்து..

சினிமாவிலும் அரசியலிலும் கில்லியாய் சுழன்று வருகிறார் தளபதி விஜய். இதோ தவெக மாநாடும் நடைபெற உள்ள நிலையில்.. இது குறித்து விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ.சி. கூறிய பேச்சு வைரலாய் தெறிக்கிறது. அது குறித்து பார்ப்போம்..

தளபதி விஜய்யின் தவெக கட்சியின் மாநாடு இன்னும் இரு தினங்களில் நடக்கவுள்ள நிலையில், அதற்கான அடுத்தடுத்த பணியினில் கட்சி நிர்வாகிகளுடன் இணைந்து பரபரப்பாக செயல்பட்டு வருகிறார். தற்போது நடித்து வரும் தளபதி 69 படத்துடன் சினிமாவில் இருந்து ஓய்வெடுக்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

சினிமாவில் இருந்து விலகி, தீவிர அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் வரும் 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தன்னுடைய கட்சி பங்கேற்கும் என்றும் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், வரும் 27-ம் தேதி கட்சியின் முதல் மாநாடு விக்கிரவாண்டியில் மிகவும் சிறப்பாக திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான திட்டப்பணிகளில் கட்சி நிர்வாகிகளுடன் விஜய் ஈடுபட்டு வருகிறார்.

இதையொட்டி அவரது தளபதி 69 படத்தின் சூட்டிங் கடந்த 5-ம் தேதி பூஜையுடன் சென்னையில் துவக்கப்பட்டது. இதில் பாரம்பரிய லுக்கில் வேட்டை சட்டையுடன் காணப்பட்ட விஜய்யின் புகைப்படங்கள் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்தது. உடன் பூஜா ஹெக்டே, மமிதா பைஜு, பாபி தியோல் மற்றும் படத்தின் இயக்குநர் ஹெச் வினோத் ஆகியோரும் பங்கேற்றனர்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய விஜய்யின் அப்பாவும் பிரபல இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர், ‘வரும் ஞாயிற்றுக்கிழமை நடக்கும் தவெக மாநாடு சிறப்பாக நடக்க வேண்டும். எங்க தளபதிக்கு நல்ல பேர் கிடைக்க வேண்டும் என்றும் கூறிய அவர், ஒரு பெரிய நிலைமைக்கு வரவேண்டும். தமிழகத்திற்கு ஒரு பொக்கிஷம் கிடைக்க வேண்டும்’ என்று குறிப்பிட்டுள்ளார். இந்நிகழ்வு ரசிகர்களால் வைரலாகி வருகிறது.

இதையொட்டி, வடசென்னையை சேர்ந்த தவெக நிர்வாகிகள் கொரட்டூர் பாபா கோயிலில் அன்னதானம் செய்ததையும் எஸ்ஏசி சுட்டிக் காட்டி பாராட்டு தெரிவித்துள்ளார்.
தங்களின் அண்ணன் விஜய்க்காக, தளபதிக்காக இவர்கள் அனைவரும் இந்த விஷயத்தை மேற்கொண்டுள்ளதாகவும் எஸ்ஏசி பாராட்டியுள்ளார்.

முன்னதாக விஜய், தன்னுடைய கட்சியை அறிவித்த சில வாரங்களிலேயே தன்னுடைய அம்மா மற்றும் அப்பா இருவரையும் அவர்களது வீட்டில் சென்று சந்தித்து ஆசிர்வாதம் பெற்றிருந்தார். இதையடுத்து, அடுத்தடுத்த விஜய்யின் நிகழ்ச்சிகளில் எஸ்ஏசி பங்கேற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

எந்த வேர்வைக்கும் வெற்றிகள் ‘வேர்’ வைக்கட்டும்.!


director s.a.c hails vijay and his political party..
tamilnaduThalapathy Vijaytvk partyஇயக்குநர் எஸ்ஏ சந்திரசேகர்தளபதி 69