மாரி செல்வராஜ் சர்ச்சைப் பேச்சுக்கு, நெட்டிசன்கள் கருத்து..

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் ‘பைசன் காளமாடன்’ படம் பார்த்து இயக்குநர் மாரி செல்வராஜை தனது வீட்டிற்கு அழைத்து பாராட்டிய நிலையில், இதுகுறித்த புகைப்படத்தை வெளியிட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார் மாரி செல்வராஜ்.

இந்நிலையில், செய்தியாளர்கள் கேள்விக்கு உதாரணம் கூறுகிறேன் என பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். இதை தொடர்ந்து அவர் பேசியது குறித்து நெட்டிசன்கள் விவாதித்து வருகிறார்கள்.

அதாவது மாரி செல்வராஜ் இயக்கிய கர்ணன், பைசன் போன்ற படங்களில் வெள்ளையாக இருக்கும் கேரள நடிகைகளுக்கு கருப்பு மேக்கப் போட்டு நடிக்க வைத்திருந்தார். இதுகுறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். ஏன் கருப்பான நடிகைகளையே நடிக்க வைத்திருக்கலாமே என கேட்டனர்.

இதற்கு பதில் சொன்ன மாரி செல்வராஜ் ‘திரைப்படத்தில் ஹீரோயின் கதாபாத்திரத்திரம் ஊனமுற்றவர் என்றால், உண்மையிலேயே ஊனமுற்றவரை நடிக்க வைத்து அவரை கஷ்டப்படுத்த முடியுமா? அதேபோல தான் இதுபோன்ற கதாபாத்திரத்தில் யார் அர்ப்பணிப்புடன் இருக்கிறார்களோ அவர்களைத்தான் தேர்வு செய்தோம்’ என கூறியிருந்தார்.

இதைக்கேட்ட நெட்டிசன்கள் ‘கருப்பாக இருக்கும் நடிகைகளுக்கு அர்ப்பணிப்பு இல்லை என்பதை எப்படி சொல்கிறீர்கள்? பேச வேண்டும் என்பதற்காக எதையும் பேசாதீர்கள். உதாரணத்திற்கு கூட ஊனமுற்றவர்களை பற்றிப் பேசுகிறீர்கள்’ என கருத்துகள் தெரிவித்த வண்ணம் உள்ளனர். தற்போது துருவ் விக்ரம்-அனுபமா நடிப்பில் வெளியான ‘பைசன்’ படம் வரவேற்பும் பாராட்டும் பெற்று வருவதும் குறிப்பிடத்தக்கது.

director mari selvaraj has been caught in controversy
‘பைசன் காளமாடன்’actress anupamabison moviedirector mari selvarajரஜினிகாந்த்