ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில், தனுஷ் பாடிய பாடல்; வைரலாகும் நிகழ்வு..

ஏ.ஆர்.ரகுமான் கச்சேரியில் தனுஷ் பாடிய பாட்டு தற்போது வைரலாகி வருகிறது. இது பற்றிப் பார்ப்போம்..

‘இசைப்புயல்’ ஏ.ஆர்.ரகுமானுக்கு உலக அளவில் ரசிகர்கள் உள்ளனர் என்பது தெரிந்ததே. அவ்ங்கையில், மும்பையில் உள்ள டி.ஒய் பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் அவரது இசை நிகழ்ச்சி நடைபெற்றது. அவரது பாடல்களைக் கேட்க அரங்கம் முழுவதும் ரசிகர்கள் நிறைந்திருந்தனர்.

அண்மையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில், அதன்பின் அவர் பங்கேற்ற முதல் இசை நிகழ்ச்சி இதுவாகும். இதில் முழு எனர்ஜியோடு ஏ.ஆர்.ரகுமான் பாடியதைக் கேட்டு ரசிகர்கள் உற்சாகம் அடைந்தனர்.

இந்த இசை நிகழ்ச்சியில் எக்ஸ்ட்ரா ஸ்பெஷல் என்னவென்றால், தனுஷும் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டது மட்டுமின்றி, மேடையேறி ஏ.ஆர்.ரகுமான் உடன் சேர்ந்து பாடல் ஒன்றையும் பாடி அசத்தினார். அதுவும் தமிழ்ப்பாடலை பாடினார் தனுஷ்.

தனது 50-வது படமான ‘ராயன்’ படத்தில் இருந்து ஏ.ஆர்.ரகுமான் இசையில், தான் பாடிய ‘அடங்காத அசுரன்’ பாடலை பாடினார். அந்த பாடலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது ரசிகர்களால் இந்நிகழ்வு வைரலாகி தெறிக்கிறது.

தனுஷ் பாடிய தமிழ்ப் பாடல் ஏ.ஆர்.ரகுமான் கான்சர்ட்டில் ஒரு ஹைலைட்டான விஷயமாக மாறியது. அடுத்ததாக, தனுஷ் நடித்து வரும் இந்தி படமான ‘தேரே இஸ்க் மெயின்’ படத்திற்கும் ஏ.ஆர்.ரகுமான் தான் இசையமைக்கிறார். ஆனந்த் எல்.ராய் இயக்குகிறார். இப்படப்பிடிப்பின் இடைவெளியில் இசைநிகழ்ச்சி நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

dhanush song in ar rahman mumbai concert

 

A.R. Rahmanactor dhanushMusicஇசைஏ ஆர் ரகுமான்