நயன்மீது தனுஷ் சூசகமாய் ஆத்திரமடைந்துள்ள நிகழ்வு வைரலாகி வருகிறது. இது பற்றிய தகவல்கள் காண்போம்..
நயன்தாரா தனது ஆவணப்படத்தை கடந்த ஆண்டு நெட்பிளிக்ஸில் ரிலீஸ் செய்தார். அந்த ஆவணப்படத்திற்காக நானும் ரெளடி தான் பட பாடல்களை பயன்படுத்திக் கொள்ள அனுமதி கோரி இருக்கிறார் நயன்தாரா. ஆனால், தனுஷ் அதற்கு அனுமதி கொடுக்கவில்லை.
பின்னர், அந்த ஆவணப்படத்தின் டிரெய்லர் ரிலீஸ் ஆனபோது, அதில் நானும் ரெளடி தான் பட ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட காட்சிகள் இடம்பெற்று இருந்தன. அதற்கு உரிமை கோரி தனுஷ் நோட்டீஸ் அனுப்பினார். அந்த நோட்டீஸில் அந்த காட்சிகளை நீக்காவிட்டால் 10 கோடி இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் தனுஷ் குறிப்பிட்டிருந்தார்.
இதனால் நயன்தாரா, தனுஷுக்கு பதிலடி கொடுத்து அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
இதையடுத்து, நயன்தாரா மீது தனுஷ் வழக்கு தொடர்ந்து, அது விசாரணை நடைபெற்று வருகிறது. இது பற்றிய நிகழ்வுகளுக்கு மௌனம் காத்து வந்தார்.
தற்போது, குபேரா பட இசை வெளியீட்டு விழாவில் ஆவேசமாக தனுஷ் பேசிய வீடியோவை இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். அதில், ‘என்னைப் பத்தி எவ்ளோ வேணா வதந்தியை பரப்புங்க, என்ன வேணா நெகட்டிவிட்டிய பரப்புங்க. ஒரு ஒருவாட்டியும் என் படம் ரிலீசுக்கு ஒன்றரை மாசம் முன்னாடி நெகடிவிட்டிய பரப்புங்க. என் ரசிகர்கள் தீப்பந்தமா இருக்குற வரைக்கும் நான் போய்கிட்டே இருப்பேன்.
தம்பிங்களா கொஞ்சம் தள்ளிப்போய் விளையாடுங்க ராஜா. இந்த சர்க்கஸ்லாம் இங்க வேணாம். என்னுடைய வழித்துணை என் ரசிகர்கள். நீங்க சும்மா ஒரு 4 வதந்திய பரப்பி விட்டுட்டு, காலி பண்ணிடனும்னு நினைச்சா, அதைவிட முட்டாள்தனம் எதுவும் இல்லை. உங்களால ஒரு செங்கலை கூட ஆட்ட முடியாது. எண்ணம் போல் வாழ்க்கை, எண்ணம் போல் தான் வாழ்க்கை’ என கூறியுள்ளார். இது தொடர்பாக இணையவாசிகள் அது ‘நயன்தாரா தான்’ என தனுஷ் பேச்சை வைரலாக்கி வருகின்றனர்.